புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு

தேதி: February 12, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மஹாலெட்சுமி அவர்களின் புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மஹாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

புடலங்காய் - 2 கப்
கடலைப்பருப்பு - அரை கப்
தேங்காய்த் துருவல் - அரை கப்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
வெங்காயம் - ஒன்று
காய்ந்த மிளகாய் -2
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவைக்கேற்ப


 

புடலங்காயை இரண்டாக நறுக்கி உள்ளே சுத்தம் செய்து நன்றாக கழுவி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, காய்ந்த மிளகாயை சேர்த்து தட்டி வைக்கவும். கடலைப்பருப்பை முக்கால் பதம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். (சுண்டல் பதத்திற்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்). வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தட்டிய பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு அதில் புடலங்காயை போட்டு வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் முக்கால் பதம் வெந்த கடலைப்பருப்பையும் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி இறக்கவும்.
சுவையான புடலை கடலைப்பருப்பு கூட்டு தயார்.

கூட்டு தளர வேண்டுமெனில் கடைசியாக தேங்காயை அரைத்து விழுதாக சேர்த்து கிளறி சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்