Fishy smell in urine for 4 years girl

என் 4 வயது மகள் படுக்கையில் சில‌ சமயம் யூரின் போய் விடுகிறாள். பயங்கர‌
fishy smell யூரின் போனதும் ரூம் முழுவதும் தாங்க‌ முடிய‌ வில்லை. ஏன் இப்படி எதுவும் infection ஆக‌ இருக்குமா. தெரிந்தவர்கள், அனுபவம் உள்ளவர்கள் பதில் கூறவும். அவள் நிறைய‌ தண்ணீர் குடிக்கிறாள். day time - ல் பாத்ரூமில் போவதால் smell தெரிய‌ வில்லை.
Note: நேற்று ஃபிஷ் சாப்பிட்டாள். முன்ன‌ constipation problem அவளுக்கு இருந்த்து ஆனால் இப்பொழுது ஒழுங்காக‌ போகிறாள்.

குழந்தைகள் பள்ளியில் உள்ள டாய்லட் பயன்படுத்தும் போது இன்ஃபக்‌ஷன் ஆக வாய்ப்பு அதிகம். என் பிள்ளைகளுக்கும் ஏற்படுகிற்து அடிக்கடி. அதிக நீர் குடிக்க கொடுப்பது மட்டும் போதாது, அடிக்கடி யூரின் போகவும் வைக்கணும். அதிக நேரம் போகாமல் இருந்தாலும் யூரின் ஸ்மெல் இருக்கும். டாக்டரிடம் காட்டி இன்ஃபக்‌ஷன் இருந்தால் மருந்து கொடுங்கள். பயப்பட வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா. அவள் school - ல் போவதில்லை எனக்கு தெரிந்து. Pre KG படிக்கிறாள். 3 மணி நேரம் தான் நடுவில் உச்சா போவியா னு கேப்பேன் போக‌ மாட்டேன்னு சொல்லுவா. வீட்டுக்கு வந்து தான் போவாள். நோர்மல் ஆ ஒரு நாளைக்கு எத்தனை முறை போக‌ வேண்டும் இந்த‌ வயது குழந்தைகள்?

Enaku date thalli 2days aakudhu .inaiku 32days aakudhu.enaku ipa ena kulapamna na sundakaai sapdalama pls sollunga ma?

ALLAHU AKBAR. . . .

:-) சாப்பிடாதீங்க. குழப்பம் வந்தா சாப்பிடாமல் விட்டுரணும். இதை சாப்பிடாம இருக்கிறதால என்ன நஷ்டம்?

ஒரு வேளை ஏற்கனவே சாப்பிட்டுட்டீங்களா? அப்படியானால் யோசிக்காதீங்க. சுண்டங்காய் எதுவுமே செய்யாது. பயம் வேண்டாம்.

இன்னொரு விஷயம். அடுத்த தடவை சரியான த்ரெட் தேடி, கேள்வியைப் பதிவு செய்யுங்க.

‍- இமா க்றிஸ்

மே பீ உங்கள் துணியோடு துவைப்பீர்களா அவளுடைய துணிகளை? வேறு பிள்ளைகளின் ஆடை எதையேனும் பயன்படுத்தினாளா? இன்ஃபெக்‌ஷன் வர இவை மட்டுமே காரணமில்லை, தானாகவே கூட வந்திருக்கலாம். பெட்ல யூரின் போனா உடனே மாற்றாம விட்டிருந்தா கூட இன்ஃபெக்‌ஷன் ஆகக்கூடும். சரியா சோப் போக வாஷ் பண்ணாத துணி கூட காரணமாகும். அதை என்னன்னு பாருங்க. ஒரு நாளைக்கு குறைந்தது 5 முறை போக வேண்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேன்க்ஸ் வனிதா. செக் பண்றேன். ஒரு நாளைக்கு 5 முறைக்கு மேலே போவாள். நான் ஃபிஷ் தான் எதுவும் ஒத்துக்கலையோன்னு நெனைச்சேன். பதில் தந்தத்ற்கு நன்றி. உங்கள் ரெசிப்பிக்ககள் மற்றும் உங்கள் கருத்துக்கள் நிறைய‌ படிச்சுருக்கேன். உங்களோடு பேசியது மிக்க மகிழ்ச்சி.

இருக்கலாம்.. அடுத்த முறை ஃபிஷ் கொடுக்கும் போதும் இப்படி ஆகுதா பாருங்க. ஒரு நாளைக்கு அப்பறமும் அந்த ஸ்மெல் இருக்கா பாருங்க. ஆனா இந்த ஸ்மெல் இன்ஃபெக்‌ஷனாலும் வரும் என்பது என் அனுபவம். என் மகன் வெகு நேரம் போகாமல் இருந்து போனால், ஸ்மெல் வருவதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். 5 முறைக்கு மேல் போகிறாள் எனும் போது அதை பற்றி கவலை வேண்டாம்.

எனக்கும் உங்களோடு பேசியதில் மிகுந்த மகிழ்ச்சி :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்டிப்பாக‌. இன்னும் 1 நாள் பார்க்கணும். இப்டியே இருந்தால் டாக்டரிடம் காட்டுறேன். நன்றி.

Dear Ranjini,தற்போது குடிக்கும் நீரின் அளவை சிறிது அதிகபடுத்தவும்.5 காய்ந்த் திராட்சையை கொதித்து ஆறிய‌ நீர் 100ml தரலாம்.கொஞ்சம் சூடான நீரில் 2tsp
சர்க்கரையை போட்டு நுரைத்து ஆற்றி கொடுக்க‌ சிறுநீர் நன்றாக‌ போகும்.முருங்கை கீரை 2 நாள் சமைத்து கொடுக்க நீர் பிரியும்.நீர் பிரிந்தாலே சிறுநீர் பாதை சுத்தமாகும் அதனால் infection குறையும்.மேலும் வீட்டிலிருக்கும்பொழுது wash with warm dettol water after pass urine.dont worry

மிக்க‌ நன்றி. கண்டிப்பாக‌ செய்து பார்க்கிறேன்.

மேலும் சில பதிவுகள்