வெங்காய சட்னி

தேதி: January 31, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம் - 1/2 கப்(சிறிய வெங்காயம்)
வற்றல் - 5
உளுந்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
புளி - சிறியது
எள்ளு எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

முதலில் அடுப்பில் சட்டியை வைத்து 1 1/2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி,மிக்ஸியில் வதக்கிய வெங்காயம்,புளி,வத்தல்,உப்பு சேர்த்து அரைக்கவும்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து மீதம் இருக்கும் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு போட்டு ,வெங்காயகலவையை போட்டு வதக்கி சிறிது நேரம் கழித்து இறக்கவும்.


இதற்கு சிறிய வெங்காயம்தான் நன்றாக இருக்கும்.தேவைகேற்ப்ப வத்தலை குறைத்தும் செய்யலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

நான் இதுவரை எள்ளு என்ணெய் சேர்த்து செய்ததில்லை.உங்க குறிப்பை பார்த்து செய்தேன் நல்ல வாசனையா சூப்பரா இருந்தது.

வெங்காய சட்னி செய்து பின்னூட்டம் தந்ததுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா