பேச்சுலர்ஸ் சிக்கன் வறுவல்

தேதி: February 14, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

சிக்கன் - ஒரு கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2 அல்லது பெரியது ஒன்று
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - 100 கிராம்
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானது


 

சிக்கனை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் எல்லாப் பொடி வகைகளையும் சேர்த்து இஞ்சி, பூண்டு விழுது போட்டு பிசறி அரை மணி நேரம் ஊற விடவும்
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும் பிசறி வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து வதக்கவும்.
சிக்கனில் இருந்து வரும் தண்ணீர் வற்றி வரும் போது மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மூடி வேக விடவும். இடையில் திறந்து கிளறி விடவும்.
சிக்கனிலுள்ள தண்ணீர் முழுவதுமாக வற்றியதும் சுருள பிரட்டி விட்டு சிறுத்தீயில் 10 நிமிடம் கிளறி மசாலா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும்.
சுவையான பேச்சுலர்ஸ் சிக்கன் வறுவல் ரெடி. திருமதி. சரஸ்வதி அவர்களின் குறிப்பினை பார்த்து முயற்சி செய்தது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தர்ஷா இப்படி சிக்கனா திண்ணா உடம்பு சூடாகாம என்ன செய்யும். சிக்கனை சிறுது நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் புரியுதா.. இந்த மாதிரி சிக்கனை பார்த்தா எல்லாத்தையும் அபேஸ் பண்ணி நானே சாப்பிடுவேன்.. சூப்பர் கடைசி படம் அள்ளுது..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

எச்சில் ஊறுது பார்க்கவே. சூப்பர் தர்ஷா

Be simple be sample

கலக்கல் ரெசிபி படங்கள் எல்லாமே அழகு கடைசி படம் உடனே சாப்பிடதோனுது :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Hai tharsha madam,
I try your recipe and it was a good taste thank you.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி