பெப்பர் சிக்கன்

தேதி: February 14, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - 2 அங்குலத் துண்டு
பூண்டு - 15 பற்கள்
மிளகு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிது
தாளிக்க :
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 2 துண்டு
கிராம்பு - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

கோழிக் கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் மிளகு, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கிய விழுதோடு சுத்தம் செய்த சிக்கனையும் சேர்த்து வதக்கவும்.
சிக்கனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கிளறி மூடி வைத்து நன்றாக வேக வைத்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.
சுவையான காரசாரமான பெப்பர் சிக்கன் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுவா ஈசியான செய்முறை பெப்பர் சிக்கன் சூப்பரா இருக்கு.. நாக்கு ஊறுது (ஐய்யோ வெங்கி கண்ணை குத்திங்) சீக்கிரம் செய்து நானும் படம் காட்டுகிறேன்.. வாழ்த்துகள் சுவா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

:P நாக் அவுட். சீக்கிரம் செய்துடணும். ஆசையா கிளப்புறீங்களே

Be simple be sample

ஈஸியா இருக்கு. சூப்பராவும் இருக்கும்னு நினைக்கிறேன். இந்த‌ வாரம் செய்ய‌ வேண்டியது தான்.

எல்லாம் சில‌ காலம்.....

எனது குறிப்பை வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கு நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஈசியான செய்முறைதான் செய்து பாருங்க மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேவா அப்போ உடனே செய்து சாப்பிடுங்கோ ;) மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆமாங்க ஈசி & டேஸ்டிதான் தைரியமா செய்து பாருங்க :) மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பெப்பர் சிக்கன் செம‌ சூப்பர் ரெசிபி..:) இன்னைக்கு காலை ல‌ உங்களோட‌ இந்த‌ ரெசிபி தான் சூப்பர் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி செய்தாச்சா மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இன்று உங்கள் ரெசிப்பி தான் செய்திருக்கேன். சூப்பரா இருக்கு ரொம்ப நன்றிப்பா
அன்புடன் அபி