மாமியாருக்கு ஒரு சேதி மருமகளுக்கு ஒரு சேதி

அன்புத் தோழிகளுக்கு,

மேலே கொடுத்திருக்கும் தலைப்பு - ஒரு பழைய பாடலின் ஆரம்ப வரி

”மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி

மருமகள் தன்னை பெருமைகளுடனே
வாழ வைப்பது புது நீதி

மருமகளெல்லாம் எருமைகளா
அந்த மாமியாருக்கு அடிமைகளா

அத வயசானவங்க புரிஞ்சுக்கணும்
நம்ம வாலிப மனச தெரிஞ்சுக்கணும்

பழசா போன பாத்திரமெல்லாம்
பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்

கிட்டத்தில் நின்னா சிரிச்சா என்று
கேள்வி கேட்க கூடாது

தட்டி மறைவில் காதை கொடுத்து
ஒட்டு கேட்க கூடாது

ஊதுவத்திய பொருத்தும் போது
உஸ்ஸுன்னு பெருமூச்சாகாது

பஞ்சண மெத்தைய விரிக்கும் போது
பக்குன்னு இரும கூடாது

சாவியை மருமகள் கையில் கொடுத்து
ஜப மாலை தன்னை எடுத்துக்கணும்”

சாமி பக்கணும் கோவில் போகணும்
நம்ம சந்தோஷத்துக்கு
டைம் கொடுக்கணும் கொடுக்கணும்”

இவை அந்தப் பாடலின் சில வரிகள்.

மருமகள்களோட எதிர்பார்ப்புகளில் முக்கியமானவை எல்லாம் இந்த வரிகளில் தெரிகின்றனதானே.

ஆஹா! சொல்ல‌ வந்ததை சொல்லலையே! எசப்பாட்டு பிரமாதம்! அசத்திட்டீங்க‌ சீதாம்மா!!

உண்மையில் மாமியாருக்கும், மருமகளுக்கும் நல்ல‌ சங்கீத‌ ஞானம் இருந்து, விஷயங்களை பாட்டாவே பகிர்ந்துக்கிட்டாங்கன்னா, அந்த‌ வீடு எப்படி இருக்கும்!!! :))))))))

அனு

//மருமகளுக்கும் நல்ல‌ சங்கீத‌ ஞானம் இருந்து, விஷயங்களை பாட்டாவே பகிர்ந்துக்கிட்டாங்கன்னா, அந்த‌ வீடு எப்படி இருக்கும்!!! :))))))))//

களை கட்டும் போங்கோ. பக்கத்து வீட்ல‌ உள்ளவங்களுக்கும் நல்லா நேரம் போகும்.
புதுசு புதுசா பாடல் பிறக்கும். அந்த‌ வீட்ல‌ எல்லோரும் ஜால்ரா தட்டலாம்: ஒத்து ஊதலாம். சிங்கி அடிக்கலாம். மொத்தத்தில‌ நல்ல‌ கலகலப்பா இருக்கும்:)))))

சீதாம்மா. எங்க ஸ்ட்ரீட்ல கல்யாணம் ஆக நிறைய பொண்ணுங்கதான் இருக்கு. ;)

நீங்க சொன்ன மேட்ரிமோனியல் மேட்டர் ரொம்ப கரெக்ட். நான் இந்த பொண்ணுங்க சொல்லறதுதான் டெய்லி பார்க்கிறேனே. முடியல போங்க. இப்படில்லாம் போறதுக்கு முன்னாடியே மாமியார் வீட்டுல ஒரு சின்ன வெறுப்பு வளர்ந்துட்டா எப்படி மாமியாருடன் , குடும்பத்துடன் ஒரு ஒட்டுதல் வரும். மாமியார் நல்லவங்களா இருக்கணும்ன்னு நினைக்கிறவங்க நாம நல்லவளா நடந்துக்கணும். என்னை பொறுத்தவரைக்கும் நாம் எப்படியோ நம்மை சுத்தி உள்ளங்களும் அப்படிதான் இருப்பாங்க. எதை குடுக்கிறோமோ அதையே எடுக்கிறோம். அன்போ, நேசமோ,கோபமோ, வெறுப்போ எதுவும். எனக்கு மாமியார் இல்லனாலும் மாமியார் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நான் நல்ல மருமகள்தான். ;)

Be simple be sample

அன்பு மாலினி மாமி,

அப்படிக் கூப்பிடலாமோ இல்லையோ(இதை அவ்வை சண்முகி படத்துல மீனா சொல்வாங்களே, அந்த வாய்ஸ்ல படிங்க)

நீங்க சொல்லியிருப்பது போலத்தான் இப்ப பெண்கள் கேக்கிறாங்கன்னு நானும் கேள்விப்பட்டேன். பாங்க்ல கேஷ் பாலன்ஸ் எவ்வளவுன்னு கேக்கறாங்களாம். இது கூட பரவாயில்ல, இன்ஷுரன்ஸ் எவ்வளவுக்கு எடுத்துருக்கார் என்று பெண்ணின் உறவினர் ஒருவர் கேட்டதால, பையன் வீட்ல அதிர்ச்சி ஆகி, எழுந்து வந்துட்டாங்களாம். என்னத்தை சொல்றது?

அந்தக் காலத்தில் கட்டுப்பாடுகளுக்கும் அடங்கி நடக்கறதுக்கும் மட்டும்தான் முக்கியத்துவம் இருந்தது. எனக்கு பல சமயம் என்ன தோணுதுன்னா, இப்படியே அடங்கி அடங்கி வீட்டுக்குள்ள முடங்கிப் போய், எத்தனை திறமைகள் வெளிச்சத்துக்கு வராம போயிடுச்சோன்னு நினைப்பேன்.

இப்ப பாருங்க, கணினி கத்துக்கிட்டு, நாமும் இங்க வந்து பேசலாம், நம்ம மருமகளும் வந்து எழுதலாம்.

அந்தக் காலத்தில் முன்னேற்றம் என்பதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது. கூடப் பிறந்தவங்களில் ஒருத்தர் டாக்டர் ஆகியிருப்பார், ஒருத்தர் விவசாயம் பாத்துட்டு இருப்பார். ஒரு பொண்ணுக்கு நிறைய குழந்தைகள் இருக்கும், இன்னொருத்தருக்கு ஒன்றிரண்டு குழந்தைகள்தான் இருக்கும். ஆனா, எந்தவொரு பிண்ணனியும் மன வேற்றுமையை உண்டு பண்ணினதில்லை, இப்ப அப்படியா? இருக்கிற ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை மிகச் சிறப்பாக முன்னுக்குக் கொண்டு வர முதலிலிருந்தே பாடுபட வேண்டியிருக்கு. இந்தப் போராட்டத்தில, முன்னுரிமைங்கறது போய், மாமியார் பின்னுக்குத் தள்ளப்பட்டுடறாங்கன்னு நினைக்கிறேன். பிரியாரிடி மாறிடுது.

சொன்னீங்களே ஒரு வார்த்தை - ‘யாரையும் குற்றம் சொல்லிப் பயனில்லை’ன்னு. நூறு சதவிகிதம் உண்மை.

எல்லோருமே தான் மாமியாராக ஆகும்போது எப்படி இருக்கணும் என்று நிறைய ஆசை வச்சுத்தான் இருப்பாங்க. ஆனா நடைமுறையில் என்ன ஆகுதுன்னா, மருமகளாக - வீட்டுப் பெரியவங்க கட்டுப்பாட்டில் இருந்து, பிள்ளைகளை வளர்த்து, திடீர்னு மாமியார் பிரமோஷன் கிடைச்சதும் அந்தப் பொசிஷனை சரியா ஹேண்டில் பண்ணத் தெரியாம திணறிப் போகிறோமோன்னு கூடத் தோணுது.

யதார்த்தத்தைப் புரிஞ்சுகிட்டு ஃபிக்ஸ் ஆகி விடுவதுதான் சரி. எதுக்கு வருத்தப்படணும்? கஷ்டப்பட்டு கஷ்டப்படறதை விட, இஷ்டப்பட்டு கஷ்டப்படுவோமே.

வாழ்க்கை போராட்டம்தான். ஆனா போராடறதுக்கு எதுவுமே இல்லாத வெறுமையை விட, ஜெயிக்கலாம்ங்கற நம்பிக்கையோட ஓடும் இந்த நாட்கள் சுகமான சுமைதானே.

தொடர்ந்து வாங்க, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இளைய தலைமுறையின்ரின் ரியாக்‌ஷனையும் தெரிஞ்சுக்கலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு நிகிலா,

உங்க கருத்துக்களோட வாங்க, ஆவலுடன் காத்துட்டிருக்கோம்.

//அந்த‌ வீட்ல‌ எல்லோரும் ஜால்ரா தட்டலாம்: ஒத்து ஊதலாம். சிங்கி அடிக்கலாம். மொத்தத்தில‌ நல்ல‌ கலகலப்பா இருக்கும்// இத மாமியாரும் மருமகளும் செஞ்சாலே பேச்சும் பிரச்னையும் குறைஞ்சிடும்.:):)

அத்தை: என்ன, குழம்பில் உப்பு ஜாஸ்தியா இருக்கு.

மருமகள்: கரெக்டா சொன்னீங்க அத்த, தெரியாத்தனமா 2 தடவ போட்டுட்டேன், சாரி, சாரி.

அத்தை: இந்த சேலை உனக்கு நல்லாவே இல்ல.

மருமகள்: ஆமா அத்தை, அவர் கூட இதையேதான் சொன்னாரு.

அத்தை:(மனசுக்குள்ள) என்ன சொன்னாலும் ஆமா பாட்டு பாடினா என்னதான் பண்றது?

:):):)

மருமகள்: பக்கத்து வீட்டுல அப்படி என்னதான் அரட்டையோ, வீட்டு விஷயமெல்லாம் அவங்ககிட்ட ஏன் சொல்றீங்க.

மாமியார்: கரெக்ட்தாம்மா நீ சொல்றது, நானும் அப்பவே புடிச்சு சீரியல் பாக்க நேரமாகுதேன்னு தவிக்கிறேன், நல்ல வேளை நீ வந்ததனால அவங்க நிறுத்தினாங்க பேச்சை.

மருமகள்: ???!!!!

:):):)

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வாணி,

கொஞ்ச நாளைக்கு முன்னால ‘நீயா நானா’ நிகழ்ச்சியில, ஓரகத்திகள் ரெண்டு பக்கமும் பேசினது கொஞ்ச நேரம் பார்த்தேன்.

அதில ஒருத்தங்க - தனக்கு எடுத்த முகூர்த்தப் பட்டுச் சேலைய விட, தன்னோட ஓர்ப்படிக்கு அதிக விலையில் எடுத்துட்டாங்க, மனசு சங்கடமாகிடுச்சுன்னு சொல்லிட்டே, பொசுக்குன்னு அழுதுட்டாங்க. அவங்க உணர்வுகள் நிஜம். அது சின்ன விஷயம்னு பாக்கிறவங்களுக்குத் தோணினாலும், அவங்களுக்கு அது ஒரு பெரிய விஷயம்தான்.

மாமியார் மருமகளாவது வயசு வித்தியாசம், தலைமுறை இடைவெளி, பொசசிவ்னெஸ் என்று ஆயிரம் காரணம் கண்டு பிடிக்கலாம். ஒரு வீட்டின் மருமகள்கள் ஒத்துப் போவது என்பது கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கு எல்லா இடத்திலும். ஒரே வயசில் இருப்பவங்க ஃப்ரெண்ட்ஸ் மாதிரி பழகிக்கலாம், ஆனா, இதுக்கு மாமியாரே தடையா இருந்தாங்கன்னா, பிரச்னைதான்.

நம்ம காலத்துக்கு அப்புறமும் நம் பிள்ளைங்க ஒத்துமையாக இருக்கணும். ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருக்கணும்ங்கற தெளிவு மாமியார்களுக்கு வரணும். அப்படி வந்தால் இந்த பேதம் காமிக்க மாட்டாங்க. நாம இன்னிக்கு நடந்து கொள்ளும் முறை, பல வருடங்களுக்கு அப்புறமும் மருமகள்கள் இடையில் ஒரு எதிரொலியை உண்டு பண்ணும்ங்கறது மாமியார்கள் கண்டிப்பாக தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்.

நீங்க சொன்ன மாதிரி, எதையும் பேசித் தீர்த்துட்டால், மனசு சரியாகிடும். இன்னும் நம் வீடுகளில் இந்தப் பழக்கம் வரலியே. பேசினாலே, எதிர்த்துப் பேசறா என்று குறை சொன்னால் என்னதான் செய்யறது?

ஆனா வாணி, நீங்க சொல்வது போல அங்கே குடும்பப் பிரச்னைகளுக்குக் காரணம் குடும்ப உறுப்பினர்கள் இல்லாம இருக்கலாம். இங்கே நம் நாட்டைப் பொறுத்த வரைக்கும் நிறைய வீடுகளில் குடும்பப் பிரச்னைகளை சரி செய்ய வேண்டியது, சரியாக இல்லாத குடும்பங்களை பாதுகாக்க வேண்டியது பெரியவங்க கடமையாகத்தான் இன்னும் இருக்கு. அதுக்குக் காரணத்தை யோசிக்கறப்ப, ஆண்களும் சரி, பெண்களும் சரி, கல்யாணம் ஆனாலும் மன முதிர்ச்சியில் கொஞ்சம் பின் தங்கியிருக்காங்களோ என்னவோன்னு தோணுது.

இன்னொரு விதத்தில் நீங்க சொல்லியிருப்பதுதான் சரின்னும் படுது. அவங்க போக்கில் விட்டுட்டா, அவங்களே சரியாகிடுவாங்க, நாம தலையிடுவதனால்தான் குழப்பங்கள் இன்னும் கூடுது போல. பாக்கலாம்.

மீண்டும் வாங்க வாணி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அஷ்வத் தேவி,

கஷ்டப்பட்டவங்களுக்குத்தான் அருமை தெரியும்னு சொல்வாங்க. நீங்க கஷ்டப்பட்டாலும் மருமகளை நல்லா வச்சுக்கணும்னு நினைக்கிறீங்க, நல்லதே நடக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு கல்யாணி,

மாமியார் மருமகள் ரெண்டு பேருக்கும் தேவையான விஷயங்களை அருமையா சொல்லியிருக்கீங்க.

‘மௌனம் கலக் நாஸ்தி’ன்னு பழமொழி உண்டு.(அப்பாடி, பழமொழி சொல்லிட்டேன்)

இந்த மௌனத்தை மருமகள் மட்டுமல்ல, மாமியாரும் கடைப்பிடிச்சா, சண்டைகள் குறைஞ்சிடும். ஆனா, என்னன்னா, பேச வேண்டிய நேரத்துல பேசாம, நிறைய வீடுகளில் ஆண்கள் நமக்கென்னன்னு கம்முன்னு இருக்காங்க பாருங்க, அதுதான் கடுப்பாகுது.

மாமியார் மருமகள் சண்டையை சரியாக்கி, சுமுகமான சூழ்நிலையை உருவாக்குவதில் ஆண்களின் பங்கும் நிறைய இருக்கணும். அதை அவங்க செய்யறதே இல்லை என்பது பெண்களின் மனக் குறை.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புத் தோழி,

அழகான புனை பெயர்.

அப்பப்பா, பொங்கி எழுந்து, கொட்டித் தீர்த்து விட்டீங்க. இப்ப உங்க மனசில் இருக்கும் பாரம் கொஞ்சமாவது குறைஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

பொதுவாக மாமியார் பிரச்னை என்று சொல்றோம், ஆனா, மருமகள் மனசு ஏன் கொதிச்சுப் போகுதுங்கறதை வரி வரியா சொல்லிட்டீங்க.

பெண்ணைப் பெற்றவங்க எப்பவுமே ஒரு மாற்றுக் குறைவாகத்தான் நடத்தப்படறாங்க நம்ம ஊரில். உங்க மனசை சமாதானப் படுத்த வேண்டி, சில விஷயம் சொல்றேன், கோவிச்சுக்காதீங்க. உங்க புகுந்த வீட்டில் உங்க பெற்றோரை மதிச்சால் சந்தோஷம்தான், ஆனா, அவங்க அப்படி செய்யாததனால, நம்ம மரியாதையோ, மதிப்போ குறையப் போகுதா சொல்லுங்க. என்ன செஞ்சால் மருமக மனசு நோகும், அப்படின்னு ரூம் போடாத குறையாக யோசிச்சு, நடக்கிறவங்ககிட்ட, நீங்க உங்க எதிர்பார்ப்புகளைக் குறைச்சுக்கோங்க. இன்னும் சொல்லப் போனா, நீங்க மனசு வருத்தப்பட்டாலே அவங்க ஜெயிச்சுட்டதா நினைச்சு, இன்னும் ரொம்ப சீண்ட ஆரம்பிப்பாங்க. அதுக்கு இடம் கொடுக்காதீங்க.

அப்புறம் வீட்டு வேலை - இந்த விஷயம் நான் அனேகமா எல்லா இடங்களிலும் பார்க்கிறேன், கேட்கிறேன். உங்களால என்ன முடியுமோ எவ்வளவு முடியுமோ அதை மட்டும் செய்யறதுக்கு இனிமேலாவது பழகுங்க. இந்தத் தவறை நம்மில் நிறையப் பேர் வீட்டிலும் ஆஃபிஸிலும் செய்துட்டு, பின்னாடி வருத்தப் படறோம். உதாரணமா உங்க வீட்டுல 1 ஆழாக்கு அரிசி சமைப்பீங்களா இருக்கும், மாமியார் வீட்டுக்குப் போனா, நாலு ஆழாக்கு அரிசியும் அதுக்குத் தகுந்த மாதிரி மத்ததும் செய்வீங்க. இதுவே உங்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும். ஆனா, பல்லைக் கடிச்சுகிட்டு நீங்க செய்தாலும் நல்ல பேர் கிடைக்கலைங்கறப்ப என்ன செய்யறது? இதையே இப்படி யோசிங்க - நாலு ஆழாக்கு சமைக்கறதுக்குப் பதிலா, பெரிய தேக்ஸால கல்யாண வீட்டு சமையல் மாதிரி 20 ஆழாக்கு செய்யச் சொன்னா, முதல்லயே என்னால முடியாதுன்னு சொல்லிடுவீங்கதானே. அதேதான், உங்க லிமிட் என்னவோ அதை மட்டும் ஆஃபர் பண்ணுங்க போதும். எப்படியும் திட்டத்தான் போறாங்க, அட்லீஸ்ட் உங்களுக்கு மன வேதனை இல்லாம இருக்கும். அப்புறம் புரிஞ்சுக்குவாங்க.

குழந்தை விஷயம் - எப்பத்தான் திருந்தப் போறாங்களோ இந்த மாமியார்கள், தெரியலையே.

மனசைக் குழப்பிக்காதீங்க, அமைதியா இருங்க. காலம் ஒரு நாள் மாறும்.

நீங்க சொல்லியிருக்கும் விஷயங்களைப் படிக்கறப்ப எனக்குத் தோணுவது ஒண்ணுதான். வீட்டு ஆண்கள் எல்லாத்தையும் கண்டும் காணாத மாதிரி இருக்காம,(மாமனாரை சொல்றேன்) கொஞ்சம் பக்குவமா ரெண்டு பக்கமும் பேசினா, இந்த பிரச்னைகள் சரியாகிடும்னு தோணுது.

ஆண்கள் யாருமே இந்தப் பக்கம் வரக் காணோமே, அவங்களுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி நினைக்கிறாங்க போல.

உங்க பெயர் சொல்லும் சேதி, உங்க மனசுக்கும் கிடைக்கட்டும்.

மகிழ்ச்சியா ஆனந்தமா இருக்க நினைக்கிறோம், முடியலன்னா நிம்மதியாகவாவது இருக்கணும் அட அதுவும் முடியலன்னா அமைதியாகவாவது இருக்க முயற்சி செய்வோம்.

உங்க ப்திவைப் பார்க்கும் மாமியார்கள் சில பேராவது, அட நாமும் இப்படித்தானே நடந்துக்கறோம், இனிமே மாறிக்குவோம்னு நினைச்சால் நல்லது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அனு,

ரசிச்சுப் படிச்சேன் உங்க பதிவை. சூப்பர்.

மாமியார் மருமகள் உறவில் யாருக்கு பொறுப்பு அதிகம், முதல் அடி யார் எடுத்து வச்சு, எப்படி நடந்துக்கணும் என்பதை அருமையா சொல்லிட்டீங்க.

’நல்ல மாமியாராக நடந்து கொள்ள வேண்டியது ஏன்’ என்ற தலைப்பில் பாடமாகவே வைக்கலாம். எளிமையாக, அதே சமயம் தீர்க்கமா சொல்லிட்டீங்க.

நல்ல மாமியாராக நடந்துகிட்டா, கண்டிப்பாக மருமகளுக்கு பிடிச்ச மாமியாராகவும் ஆகிடலாம். இந்த ஃபார்முலா வொர்க் அவுட் ஆகும்ங்கற சூட்சுமத்தை மாமியார்கள் புரிஞ்சிகிட்டாலே வீடு நிம்மதி ஆகிடும்.

அதுக்கு முதல்ல மாமியார்களுக்கு தன்னம்பிக்கை தேவைன்னு நினைக்கிறேன். அவங்களுக்கு ஒரு இன் செக்யூர்ட் ஃபீலிங், காம்ப்ளெக்ஸ் இதெல்லாம் இருக்கறதை தூக்கிப் போட்டுடணும். சரியாகிடும்.

பாட்டு நல்லா இருந்துச்சா, தாங்க்ஸ் அனு.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்