மாமியாருக்கு ஒரு சேதி மருமகளுக்கு ஒரு சேதி

அன்புத் தோழிகளுக்கு,

மேலே கொடுத்திருக்கும் தலைப்பு - ஒரு பழைய பாடலின் ஆரம்ப வரி

”மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி

மருமகள் தன்னை பெருமைகளுடனே
வாழ வைப்பது புது நீதி

மருமகளெல்லாம் எருமைகளா
அந்த மாமியாருக்கு அடிமைகளா

அத வயசானவங்க புரிஞ்சுக்கணும்
நம்ம வாலிப மனச தெரிஞ்சுக்கணும்

பழசா போன பாத்திரமெல்லாம்
பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்

கிட்டத்தில் நின்னா சிரிச்சா என்று
கேள்வி கேட்க கூடாது

தட்டி மறைவில் காதை கொடுத்து
ஒட்டு கேட்க கூடாது

ஊதுவத்திய பொருத்தும் போது
உஸ்ஸுன்னு பெருமூச்சாகாது

பஞ்சண மெத்தைய விரிக்கும் போது
பக்குன்னு இரும கூடாது

சாவியை மருமகள் கையில் கொடுத்து
ஜப மாலை தன்னை எடுத்துக்கணும்”

சாமி பக்கணும் கோவில் போகணும்
நம்ம சந்தோஷத்துக்கு
டைம் கொடுக்கணும் கொடுக்கணும்”

இவை அந்தப் பாடலின் சில வரிகள்.

மருமகள்களோட எதிர்பார்ப்புகளில் முக்கியமானவை எல்லாம் இந்த வரிகளில் தெரிகின்றனதானே.

உண்மை தான், இதை பற்றியெல்லாம் நொந்து பயனில்லை என புரிவதற்கு முன்பே நிறைய இழந்து விட்டேன். இனியும் நிம்மதியை இழக்ககூடாதுன்னு தான் தைரியத்தை வளர்த்துக்கிட்டேன். மாமியார் முதலடி வைக்கணும்னு சொன்ன தோழியை நான் பாராட்டுறேன். நல்ல கருத்து. ஆனால் நடைமுறையும் முதல்ல தாய் வீட்டில் பயங்காட்டி அனுப்பறாங்களோ இல்லையோ புகுந்த வீட்டில் தான் பயங்காட்டுறாங்க. உள்ளே நுழைந்ததுமே கண்ணை கட்டிடுது. திருமணம் ஆன முதல் ஒரு வருடம் கணவன் மனைவி அன்பாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஏற்ற காலம் என்பார்கள். ஆனால் இதில் தான் பாதி மாமியார் புகுந்து விளையடிடுறாங்க. அந்த காலத்தில் ஏகப்பட்ட சிக்கலை உண்டு பண்ணி, புதிதாக வந்தவள் பற்றி என்ன சொன்னாலும் பிள்ளை நம்புவார்கள் என்று ஏற்றிவிடுகிறார்கள். நம்மை சரியாக அறியாத கணவரும் தாய் பேசை கேட்க துவங்கினால்? இந்த காலகட்டத்தில் வந்தவள் சரியில்லை என்று தாய் சொல்லும் வார்த்தை பல ஆண்கள் மனதில் விதையாகி பின் வரும் வருடங்களில் அவ்வப்போது இவர்கள் கிண்டி கிளறும் சின்ன சின்ன விஷயங்கள் நீர் பாய்ச்சி வேரோடி வளர்ந்து விடுகிறது. நாம் என்ன செய்தாலும் குறையாகவே தெரிகிறது.

இதை விட சில வீடுகளில் புதிதாக வந்த பெண்ணிடம் “என் பையனுக்கு எப்படிப்பட்ட எடத்துல இருந்துலாம் பொண்ணு வந்துச்சு தெரியுமா? எவ்வளவு படிப்பு, எவ்வளவு பெரிய இடம், எவ்வளவு சொத்து, ஒரே பொண்ணு,, எல்லாத்தையும் விட்டுட்டு உன்ன கட்டிவெச்சோம்” என்று ஒரு வார்த்தை சொல்லி ஏற்படுத்தும் காயமிருக்கே, சொல்லி முடியாது சீதாம்மா. அடுத்த நாள் கணவனை பார்த்தால் முதலில் “அத்தனை பேரை விட்டு ஏன் என்னை தேர்ந்தெடுத்திங்க?” என்பதாக தான் இருக்கும். ஏதோ காரணத்தால் அவர்களை விட நாம் சிறப்பு என்று தான் திருமணம் செய்கிறார்கள், பின் ஏன் பிழை செய்ததாக சொல்ல வேண்டும்? அதில் என்ன அல்ப சந்தோஷம்? அப்படியே கட்டியிருந்தால் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்குமே என்றும் சொல்ல தானே வேண்டும் இப்படி மாமியாரிடம்?

சீதாம்மா தேங்ஸ்.மருமக்களை மகளாக நினைத்து எல்லாம் செய்யனும்னு ஆசையோடும் ஆவலோடும் இருக்கேன்ம்மா...எனக்கு எப்படிலாம் மாமியார் வேணும்னு ஆசைப்பட்டேனோ அதை மாதிரி நான் அவுங்களுக்கு இருப்பேன். அடாவடியாக இருந்தாலும் நான் பொறுமையாக போகணும். ........

அன்பு தோழி. தேவி

சீத்தாம்மா... காலை வணக்கம்.

ரொம்ப நாள் ஆச்சு அறுசுவையில் வலம் வந்து... இரண்டாம் கர்ப்பம், பொண்ணுக்கு பள்ளி மாற்றம், வீடு மாற்றம்னு நேரம் அமைய மாட்டேங்குது பதிவுகள் இட....

சரி இப்ப நம்ம டாப்பிக்கு வரேன்...

இதுக்கு முன்பு வந்த பதிவுகளை படிக்க இயலவில்லை, எதும் ரிப்பீட் ஆகியிருந்தால் மன்னிக்கவும்.

நான் மாமியார் பக்கம் இருந்து பேச வரேன்... நாம பெத்து, பாலூட்டி சீராட்டி பார்த்து பார்த்து ரசிச்து வளர்த்த பிள்ளைக்கு திருமணம் முடிந்ததும், தனக்கே முழுதாய் கிடைக்கும் மகனின் பாசத்தை பங்குபோட ஒருத்தி வந்துவிட்டாலே என்று பெரும்பாலான மாமியாருக்கு பயம். அதேபோல் வரும் மருமகள்களோ தன் அம்மாவை விட மனைவிக்கு தான் அதிக பாசமும், முக்கியத்துவமும் குடுக்கனும்னு மனதில் நினைச்சிடறாங்க, அங்க தான் ப்ரிச்சினையே ஆரம்பிக்குது.

மருமகள் இந்த கால ஜெனரேசன், மாமியார் போன ஜெனரேசன்... அப்படி இருக்க அவங்களை மாறனும்னு நினைப்பதை விட்டு நம்ம மருமகள்கள் மாமியாருக்கு ஏற்றதுபோல் மாறலாமே.

அவர் என்னைக்கா இருந்தாலும் உங்க பிள்ளை தான், அவருக்கு உங்கள் மேல் உள்ள பாசம் நான் வந்த அப்பறமும் துளியும் குறையாதுனு மாமியாருக்கு நாம புரிய வச்சாலே போதும்.

என்னங்க என்னங்க நு கணவனை மூச்சுக்கு முண்ணூறு முறை கூப்பிடுவதை விட, அத்தை அத்தை (அம்மா னும் கூப்பிடலாமே இன்னும் பாசம் கூடும்) மாமியரை கூப்பிட்டு பாருங்க, என் மருமகள் மாதிரி வருமான்னு அவங்களே புகழ ஆரம்ப்பிச்சிடுவாங்க. தன் மகன் மட்டுமல்ல தன் மருமகளும் தனக்கே அதிக முக்கியத்துவம் குடுக்குறானு புரிஞ்சா அவங்களே உங்க விருப்பப்படி இறங்கி வருவாங்க...

அத்தை உங்க பிள்ளைக்கு உங்க சமையல் ரொம்ப பிடிக்குமாம். உங்க கை பக்குவத்தை எனக்கும் சொல்லி குடுங்க கத்துக்கறேன்னு ஐஸ் வச்சு பேசலாம் (காசா பணமா). அத்தை இந்த சேலை உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்குனு புகழலாம். அத்தை நம்ம வீட்டு பழக்க வழக்கங்கள் எனக்கு ஏதும் தெரியாது, நீங்க சொல்லி குடுங்க நான் கத்துக்கறேன்னு, அன்பாய் பேசி மாமியார் மனதில் இடம் பிடிக்கலாம். எங்க வீட்டில் என் அத்தை மாமா ரொம்ப நல்லவங்க அவரை விட என்னை தன் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறாங்கனு உங்க அம்மாவிடமே மாமியார் காதுபட புகழ்ந்து பேசலாம்.

மாமியார் எதும் கோவத்தில் ஒரு வார்த்தை சொல்லிட்டா அவ்ளோதான், அதை பெரிசு படுத்தி ப்ரச்சினை ஆக்குறதும், இல்லை உங்கள் மனதுக்குள்ளேயே வைத்து புழுங்குவதும் வேண்டாமே. உங்க அம்மா உங்களை திட்டவே மாட்டாங்களா, உங்க அம்மாவிடம் சண்டையே போட்டதில்லையா.

பெண்ணுக்கு பெண்ணுக்கே எதிரியாய் பார்ப்பதற்க்கு பதில் புதியாய் ப்ரவேசிக்கும் உங்கள் புகுந்த வீட்டில் உங்க அம்மா வயதில் இருக்கும் உங்க மாமியாரை உங்க அம்மா மாதிரி நினைத்து அறிவுரை கேட்டுக்கொள்ளலாமே.

மகனும் சரி மல்லிப்பூ, அல்வாவை மனைவிக்கு மட்டும் தான் வாங்கிட்டு வரனுமா... ஏன் அம்மா அல்வா சாப்பிட மாட்டாங்களா, இல்ல பூ தான் பிடிக்காதா. நீங்க தொடர்ந்து ஒரு வாரம் அம்மாக்கும் சேர்த்து பூ வாங்கிட்டு வந்து குடுத்துப்பாருங்க. இது எல்லாம் எனக்கெதுக்கு டா அவதான் சின்ன பொண்ணு அவளுக்கு வாங்கிட்டு வந்து குடுடா நு அவங்களே சொல்லுவாங்க... அப்படி சொல்லலைனாலும் என்ன ஆகிட போகுது, தினம் ஒரு இருபது ரூபாய் கூட செலவாங்கும் ஆகட்டுமே ஆனால் குடும்பம் நிச்சயம் ஒற்றுமையாய் இருக்கும்.

கனவனும் மனைவியும் எந்த விசயமானாலும் அம்மா அப்பாவிடமும் ஒரு ஆலோசனை கேட்கலாமே. நாம வேனும்னால் நிறைய படிச்சிருக்கலாம், நிறைய தெரிந்திருக்கலாம் ஆனால் நம்ம பெற்றோர்களின் அனுபவம் கண்டிப்பா நம்மிடம் இல்லைனு புரிஞ்சுக்கனும்.

இப்படி என் தோழி ஒருத்திக்கு திருமணம் ஆன நாளில் இருந்தே மாமியார் மருமகள் சண்டை தான். மாமியார் மருமகளை சாடை பேசுவதும், மருமகள் மாமியாரை கரிச்சு கொட்டுறதும் அளவே இல்லாமல் நடந்திட்டே இருந்தது. 5 வருடங்களுக்கு பிறகு அவங்களை சமாளிக்க இயலாமல் திடீரென்று ஒரு நாள் மருமகள் தான் பாசமாய், அக்கரையாய் மாற, மாமியாரிடமோ பெரும் மாற்றம் நல்ல விதத்தில்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

எசப் பாட்டு சூப்பரோ சூப்பர் சீதா மேடம். கவியரசுக்கே பதிலடியா !! :) கலக்கிட்டீங்க.

ஒரே வீட்டில் பெண் எடுத்த மாப்பிள்ளைகள் சகலை என்று சொல்லிக் கொள்வதை கேட்டிருக்கேன். ஆனால் எங்கள் ஊர்ப் பக்கம் ஒரே வீட்டில் வாக்குப் பட்ட இரு மருமகள்களுக்கு எந்த பெயரும் பயன் படுத்துவதாய் தெரியவில்லை. பொதுவாக ஒருவருக்கொருவர் மச்சான் மனைவி, கொழுந்தனார் மனைவி என்றுதான் அழைத்துக் கொள்வார்கள். ஓரகத்திகள் என்று புதிதாக இப்போதுதான் கேள்விப் படுகிறேன் :)
மாற்றுப் பெண்ணை மாற்றுப் பெண்ணாக நடத்தாதினால் தான் என்னவோதான் அது மாட்டுப் பெண்ணாக மருவி விட்டதோ ?!!

என் மாமியாரின் ஒன்றுவிட்ட சகோதரி வீட்டில் நடக்கும் விஷயங்களில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.
அவர்களின் வீட்டிற்க்கு வந்த மருமகள் சிறுவயதிலிருந்தே தன் பிறந்த குடும்ப சூழலால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு தனியே சமாளித்து மிகவும் பக்குவப் பட்டவள். அவளின் மாமனாரோ வீட்டோடு மருமகனாயிருந்தவர் (38 வருடங்களுக்கும் முன்) மாமியார் ஒரு நாளும் தன் மாமியாரை சென்று பார்த்ததும் கூட இல்லை. வருடத்தில் ஒரு முறை மட்டுமே பிள்ளைகளை அழைத்து சென்று காண்பித்து வருவார், இரவில் தங்கவும் மாட்டார்.
மாமியார், மாமனார் நல்ல வேலையிலிருந்தார்கள். தன் மகனுக்கு திருமணம் முடித்தார்கள். மருமகளோ மாமனார், மாமியாரை சொந்த தாய் தகப்பன் போன்றுதான் நேசித்தாள். ஆனால் அவள் கணவன் அவளிடம் பேசினாலே மாமியாருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. திருமணம் முடிந்ததும் அவள் நகைகளையெல்லாம் மாமியார் வாங்கி அவர் அலமாரியில் வைத்து பூட்டி விட்டார். விதவிதமாக மருமகள் நகைகளை அலுவலகத்திற்க்கும், விசேஷங்களுக்கும் போட்டு செல்ல ஆரம்பித்தார். எதையும் மருமகள் கண்டு கொள்வதில்லை. தன் பிறந்த வீட்டைப் போன்றே தன் புகுந்த வீட்டையும் நேசித்ததினால் புகுந்த வீட்டு நிறை குறைகள் எதையும் தன் பிறந்த வீட்டிலும் சொல்வதே இல்லை. மாமியாரோ மகன் வேலையிலிருக்கும் போது போன் செய்து மருமகளைப் பற்றி குறை சொல்லிக் கொண்டிருப்பார். கணவன் மனைவியை எங்கு அழைத்து சென்றாலும் கூடவே மாமியாரும் சென்று விடுவார். (அவளின் தாய் வீட்டிற்க்கு, தோழிகள் வீட்டிற்க்கு விருந்திற்க்கு அழைத்தாலும்). போதா குறைக்கு அவள் பெற்ரவர்களை சிறிதும் மதிக்கவே மாட்டார். மகன் ஏதாவது கேட்டால் நாம் பையன் வீட்டார் இப்படித்தான் இருக்க வேன்டும் என கூறி விடுவாராம். அவர்கள் வீட்டு மருமகனுக்கு கூட மகனும் மருமகளும் அடங்கி நடக்க வேண்டும் என சட்டங்கள் வேறு. திடீரென்று அவள் நகைகளில் பாதிக்கும் மேல் வீட்டில் யாரும் இல்லாத போது திருடன் அடித்து சென்று விட்டான் என ஒரு வருடம் கழித்து மகனிடம் சொன்னதோடு அழுது நாடகமும் நடத்தி விட்டார். குடும்ப மானம் கருதி போலீஸ் கம்ப்ளையின்ட் கொடுக்கவில்லையாம். பாவப் பட்ட மருமகள் அதையும் தன் வீட்டாருக்கு தெரியாமல் மறைத்து விட்டாள். மருமகள் கர்ப்பமானாள்,வாந்தி எடுக்கையில் கணவன் தண்னீர் கொண்டு கொடுத்தார் அவ்வளவுதான், நான் நான்கு பிள்ளைகளைப் பெற்றேன், எனக்கும் கடுமையான வாந்தி தான் இருந்தது, ஒரு பிள்ளையை உண்டாவதற்க்குள்
பொண்டாட்டியை இப்படி தாங்குகிறாய்? கர்ப்பமானால் இப்படித்தான் இருக்கும், இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்றாரே பார்க்கலாம், :))
மகள் பிள்ளைகள் விடுமுறைக்கு வருகையில் மகள் குடும்பத்திற்க்கு மட்டுமே என்று விசேஷ உணவுகள் பரிமாறப் படும். மகன் குழந்தை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும். மகனுக்கும் எல்லாம் தெரிந்தும் தாயாயிற்றே என்று பேசாமலிருப்பாராம். இவையெல்லாம், (இதற்க்கும் மேலும்) நடந்தும் அந்தப் பெண் புகுந்த வீட்டை எவரிடமும் விட்டுக் கொடுக்கவே மாட்டார். மாமனார் குழந்த்தைகளுக்கு ஏதாவது விளையாட்டுப் பொருட்கள் வாங்கி கொடுக்க சொல்லி பணம் கொடுத்தால் அதையும் வாங்கி வைத்துக் கொள்வார்.
மருமகளை ஊரெல்லாம் குறை கூறி நாறடித்துக் கொண்டேதான் இருக்கிறார். அவளை மிகவும் கொடுமைக் காரியாகவும், மகனை தன்னிடம் ஒட்ட விடாதவளாயும் மற்ரவர்களிடம் சித்தரித்து தான் கொண்டிருக்கிறார் :((
என் மாமியார் வாயிலிருந்து நான் கேள்விப் பட்ட விஷயங்களில் சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

எனக்குள் எழும் சில கேள்விகள் :

1.தன் மகள் மட்டும் மாமியார் வீட்டில் சுக போகமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என நினைப்பவர்கள், தன் வீட்டிற்க்கு வரும் மருமகளை மட்டும் ஏன் ஒரு மனுஷியாகக் கூட நடத்துவதில்லை?

2.பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து வளர்க்கும் பெண் பிள்ளைகள், என் தந்தைதான் என் முதல் ஹீரோ என சொல்லிக் கொண்டாலும், திருமணத்திற்க்குப் பின் தந்தையை விட கணவரைத்தான் அதிகம் நேசித்து சொந்தம் கொண்டாடுகிறோம். (தி.பின் பெண்ணிற்க்கு முதல் சொந்தம் கணவர் தானே) அப்படியிருக்க ஆண்களுக்கும் அதே நியதி தானே ? மனைவி தான் முதல் சொந்தம் என்று எப்போது நம் சமூகம் கற்றுக் கொடுக்கும் ?

3.மகனுக்கு ஆண்மை குறை இருப்பின் எற்றுக் கொள்ளவே மறுப்பவர்கள், மருமகள் கரு தரிக்க தாமதமானால் விஷ வார்த்தைகளை கக்குவதேன் ?

4.மருமகளாவது இன்னோரு வயிற்றில் பிறந்தவள், ஆனால் பேரக் குழந்தைகள் (மகன் வழிப்பிள்ளைகள்) தன் இரத்த பந்தத்தில் ஜனிக்கப் பட்டவர்கள். அவர்களிடம் கூட மாமியார் என்பவர் பாரபட்சம் காட்டுவது ஏன் ?

5.பெண் வீட்டாரை எப்போதும் தாழ்த்தியே நடத்தும் பிள்ளை வீட்டார்கள் - இந்த எழுதப் படாத சட்டமெல்லாம் எதற்க்காக?

6.பெண்ணைப் பெற்றவர்கள் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சேர்த்து வைத்து தன் பெண்ணுக்கு போடும் நகைகளை புகுந்த வீட்டார் சொந்தம் கொண்டாடுவது எவ்விதத்தில் நியாயம் ?

மேலே குறிப்பிட்ட கேள்விகளில் இருக்கும் விஷயங்கள் மாறினாலே மாமியார்- மருமகள் உறவு நலமாக இருக்கும் என்று கருதுகிறேன். சமூக கண்ணோட்டமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் தோன்றுகிறது. இது தனி மாமியார்-மருமகளால் மாறக்கூடியவை இல்லை. எத்தகைய சமூகம் இவற்றையெல்லாம் உருவாக்கியதோ அத்தகைய சாமூகத்தில் ஒரு மாற்ரம் கொண்டு வர வேண்டும். அதுவரைக்கும் மருமகள்கள் மகளாக மாறினாலும், மாமியார்கள் தாயாக மாறினாலும் அதிக மாற்றம் வருமா என்பதில் சந்தேகமே.

Vani neengal solvathu sari. Ithu pothuvaga mamiar marumagal sola mudiathu. Marumagal adjust panuvathai sila mamiarkal thavaraga payanpaduthuvargal. En thozhi oruthi abortion agi 2 murai hospital La migavum serious aga irunthal. Aanal aaruthalaga iruka vendia mamiar kuthi katti pesinargal. Avalai migavum kashtapaduthi vitanar. Our magalaga vendam Oru manitharaga nadakalame.aval migavum porumaisaali . mamiaridam migavum adjust seival.irundhum avargal abortion anathuku avalai kurai sonar. Our naal kuda vanthu hospital LA paakala.
Athe pola sila marumagalum mamiar a kandale manathukul thevai ilatha pagai unarchi valarkirargal. Thanaku our pudavai edukum pothu avarukum onu edukalam. Mukkiamana viseshangaluku kaalil vilunthu aasi peralam. Avargalai naam mathikurom endra ennam vanthale pothum , sandai kuraiyum.
Ithu ellame relationship problem ila. Individual character problem.ellarum ketavangalum ila, nalavangalum ila. Naam than purinthu atharku etrathu pol nadaka vendum.

ella padhivugalum padithene mikkavum nandraka irundhadhu. naan sencha sila thappugalai thirukiradhukkum enakku vali kidaithathu.

Individual character problem.ellarum ketavangalum ila, nalavangalum ila. Naam than purinthu atharku etrathu pol nadaka vendum.// sariyana vaarthaigal.

நன்றி அக்கா நான் இதையே பின்பற்றுகிரேன், எனக்கு திருமணம் ஆகவில்லை

Enaku help panunga thozhigale.Enakum en mamiyarukum atikadi sanda varuthu,na ethu senjalum avanga kutham solranga,Enaku avolavu pakuvam illa na mudinja varaikum best da seyaren irunthalum avanga kutham solranga,athaium mathika na thayara iruken.Enaku enna romba kastama iruku na enna avanga pirichi pakaranga,neenga thaniya ponganu en husband kita solranga Enaku romba kastama iruku Enaku joinfamily na romba pidikum.mamiyar kita epadi nadathukanam ungaluku anupavam iruntha solungalen....

//neenga thaniya ponganu en husband kita solranga// ம்.. மாற‌ இயலாதவர்கள் மாற‌ வேண்டும் என்று எதிர்பார்ப்பது தப்பு. உங்களுக்கு வாழ்க்கையை ரசித்து வாழ‌ உரிமை இருக்கிறது. இப்போ எந்த‌ வகையில் சந்தோஷமாக‌ இருக்கிறீர்கள் இப்படியே தொடர‌ வேண்டும் என‌ விரும்புவதற்கு! அல்லது நீங்கள் என்ன‌ தப்புச் செய்கிறீர்கள் இப்படி மனம் வருந்துவதற்கு!!

சில‌ விடயங்கள் தூர‌ இருந்தால்தான் அவற்றின் அருமை புரியும். உங்கள் கணவர் ஒத்துக் கொண்டால் & உங்களுக்கு செலவு வசதிப்படுமானால் தனியே போகலாம். கொஞ்சம் நிம்மதியாக‌ இருப்பீர்கள். கொஞ்ச‌ காலம் போக‌ அது உங்களுக்குப் பழகிப் போகும்.

இன்னும் நீங்கள் சொல்லாதவை இருக்கக் கூடும். அதனால்... உங்களுக்குப் பிடித்தால் யோசித்துப் பாருங்கள். நீங்களாக‌ இந்த‌ முடிவை எடுக்கவில்லையே! இடைக்கிடை போய்ப் பார்த்து வரலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்