பப்பாளி க்ரானிட்டா

தேதி: February 16, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. இளவரசி அவர்களின் பப்பாளி க்ரானிட்டா குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய இளவரசி அவர்களுக்கு நன்றிகள்.

 

பப்பாளி துண்டுகள் - 2 கப்
சர்க்கரை - அரை கப்
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி துருவல் - ஒரு தேக்கரண்டி


 

பப்பாளித்துண்டுகளை இஞ்சி துருவலுடன் ப்ளெண்டரில் அடித்து எடுத்து வடிக்கட்டவும்.
பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும். அந்த சிரப்பை இறக்கி ஆற விடவும்
சிரப் ஆறியதும் பப்பாளிக் கலவை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை பவுலில் போட்டு ஃப்ரீசரில் வைத்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியில் எடுத்து கலந்து மீண்டும் வைக்கவும். இதே போல் ஆறு முறை செய்யவும்.
பின்னர் ஃப்ரீசரில் 6 மணி நேரம் வைத்திருக்கவும்.
வெளியில் எடுத்து சிறிது நேரம் கழித்து ஃபோர்க்கால் கிளறவும். சுவையான பப்பாளி க்ரானிட்டா தயார். விரும்பினால் இதனுடன் சிறிது ஐஸ்க்ரீம் சேர்த்து சாப்பிடலாம்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லா இருக்கு. இந்த‌ பப்பாளி க்ரானிட்டா நல்லா கிராண்டா இருக்கு. இது வித்யாசமா இருக்கு. கண்டிப்பா இப்டி ட்ரை பண்றேன். வாழ்த்துக்கள் கிட்சன் குயின்

எல்லாம் சில‌ காலம்.....

சூப்பர் :) கலர்ஃபுல் ரெசிபீஸ் எல்லாமே. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Colour ful receipe congerts hema

Be simple be sample