கிச்சன் க்ளாத் ஃப்ளவர் - காகித வேலை - அறுசுவை கைவினை


கிச்சன் க்ளாத் ஃப்ளவர்

திங்கள், 16/02/2015 - 10:57
Difficulty level : Easy
5
3 votes
Your rating: None

 

  • கிச்சன் க்ளாத்
  • சிறிய மணி
  • ஊசி
  • நூல்
  • கத்தரிக்கோல்

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மஞ்சள் நிற க்ளாத்தில் பெரிய அளவிலான வட்டம் வரைந்துக் கொள்ளவும். ரோஸ் நிற க்ளாத்தில் அதை விட அளவில் சற்று சிறிய வட்டமாக வரையவும். மற்றொரு மஞ்சள் நிற க்ளாத்தில் இன்னும் அளவில் சிறியதான வட்டம் வரைந்துக் கொள்ளவும்.

வரைந்த பகுதியை மட்டும் தனியே வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

வெட்டி வைத்திருக்கும் வட்டங்களை பெரிய அளவில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைத்து இரண்டாக மடக்கி பிடித்துக் கொண்டு ஏதேனும் ஒரு முனையில் ஊசி நூலால் தைக்கவும்.

அதன் பின்னர் தைத்த இடத்தின் நடுவில் மணியை வைத்து ஊசி நூலால் தைத்து விடவும்.

இதேப் போல 5 இதழ்கள் செய்துக் கொள்ளவும்.

சிறிய அளவில் ரோஸ் நிற கிச்சன் க்ளாத்தை வெட்டி எடுத்துக் கொண்டு அதன் நடுவில் சிறிது பஞ்சை வைத்து சேர்த்து இறுக்கமாக பிடித்துக் கொண்டு நூலால் தைக்கவும். மொட்டு போல் கிடைக்கும்.

ஒவ்வொரு இதழையும் எடுத்து ஊசியில் கோர்த்துக் கொள்ளவும். கோர்த்ததும் நூலை இறுக்கமாக இழுத்தால் இதழ்கள் ஒன்று சேர்ந்து பூவைப் போல் கிடைக்கும்.

அதன் நடுவில் செய்து வைத்திருக்கும் மொட்டை வைத்து பின்புறமாக தைத்து விடவும்.

எளிதில் செய்து விடக்கூடிய கிச்சன் க்ளாத்தில் செய்த பூ ரெடி. இதை குழந்தைகளின் ட்ரஸ்ஸில் வைத்து தைத்து அலங்கரிக்கலாம், க்ளிப் போல செய்யலாம்.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..பூக்கள்

ரொம்ப அழகா இருக்கு செண்பகா. ஒரு 2 வாரம் போகட்டும், ஃபெல்ட் துணியில் ட்ரை பண்ணுறேன்.

இமா க்றிஸ்