கருணைக்கிழங்கு குழம்பு

தேதி: February 17, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்கள் வழங்கியுள்ள கருணைக்கிழங்கு குழம்பு என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.

 

கருணைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி - சிறு எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

கருணைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
வெங்காயம், தக்காளி வதங்கியதும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு போட்டு வதக்கவும்.
பிறகு புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வதக்கியவற்றுடன் ஊற்றி கொதிக்க விடவும்.
கருணைக்கிழங்கை வட்டமான துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் குழம்பில் போட்டு கெட்டியானதும் இறக்கவும்.
சுவையான கருணைக்கிழங்கு குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கருணைக்கிழங்கு குழம்பு கடைசி படம் நாக்கு ஊறுது. சூப்பர் சுவா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

எல்லா குறிப்பும் சூப்பர். நாளுக்கு நாள் புகைப்படங்கள் கலக்கலாகிட்டே போகுது சுவா ;) எதாவது ரகசியம் இருந்தா சொல்லுங்கோ. மகுடம் சூடிய கிச்சன் குயினுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரான ரெசிபியை கொடுத்த திருமதி. சரஸ்வதி அவர்களுக்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றிம்மா :) சுவை சூப்பர் ரே மீன் குழம்பு மாதிரி இருந்துது :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி வாழ்த்திற்க்கும் பாராட்டிற்க்கும் மிக்க நன்றி :) அட ரகசியமா ஒன்னுமே இல்ல வனி அதே கேமரா அதே கையால எடுத்தேன் அம்புட்டுதான் இருந்தாலும் படங்கள் அழகுன்னு நீங்க சொல்வதை கேட்கும் போது சந்தோசம் நன்றி வனி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.