வெந்தய களி

தேதி: February 18, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (8 votes)

பீவி அவர்கள் வழங்கியுள்ள வெந்தய களி என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய பீவி அவர்களுக்கு நன்றிகள்.

 

வெந்தயம் - 50கிராம்
புழுங்கல் அரிசி - ஒரு டம்ளர்
சுக்கு பொடி - அரை தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி
கருப்பட்டி - 200 கிராம்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சிறிது


 

அரிசியையும், வெந்தயத்தையும் தனித் தனியே ஊற வைக்கவும். முதலில் ஊற வைத்த வெந்தயத்தை பொங்க அரைக்கவும். அதன் பின்னர் அரிசியை உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் வடிகட்டிய கருப்பட்டியை ஊற்றி மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் அரைத்த மாவை சேர்த்து ஏலம், சுக்கு பொடி தூவி கட்டி தட்டாமல் கிண்டவும்.
இந்த கலவையில் தேவையான அளவு நல்லெண்ணெயை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி விடவும்.
களி கையில் ஒட்டாமல் வரும் வரை கிண்டி பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
சுவையான ஆரோக்கியம் நிறைந்த வெந்தயக் களி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல‌ சத்தான‌ உணவு! சிம்பிள் & சூப்பர்ப்........வாழ்த்துக்கள்!

அசத்தீட்ட‌.. என்னோட‌ ஃபேவரைட் வெந்தய‌ களி:)

"எல்லாம் நன்மைக்கே"

அருமை அருமை சத்தான குறிப்பு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பரா இருக்கு. ரொம்ப‌ சத்தானது. கண்டிப்பா செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.

எல்லாம் சில‌ காலம்.....

simple and healthy dish.....

அனு,பாக்யா,சுவா,பாலா,அபி தான்க்யூ.

Be simple be sample