முருங்கை வெண்டை குழம்பு

தேதி: February 18, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. இளவரசி அவர்களின் முருங்கை வெண்டை குழம்பு குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய இளவரசி அவர்களுக்கு நன்றிகள்.

 

முருங்கைக்காய் – 2
வெண்டைக்காய் – 8
புளி - சிறு உருண்டை
தக்காளி – ஒன்று
வெங்காயம் - ஒன்று
பூண்டு – 5 பல்
கறிவேப்பிலை – ஒரு கீற்று
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி
மிளகாய்த் தூள் – ஒன்றரை தேக்கரண்டி
தனியாத் தூள் – 3 தேக்கரண்டி
சீரகத் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க : கடுகு, கறிவேப்பிலை, கறிவடகம்


 

வெண்டைக்காய் மற்றும் முருங்கைக்காயை ஒரே நீளமுள்ள துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். தேங்காய் மற்றும் வேர்க்கடலையை விழுதாக அரைத்து எடுத்து வைக்கவும். பின்னர் தக்காளி மற்றும் தூள் வகைகளை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை மற்றும் கறிவடகம் தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்னர் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி காய்களை சேர்த்து கொதிக்க விடவும். காய் வெந்ததும் புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்
குழம்பு கொதித்ததும் தேங்காய் விழுதை போட்டு 5 நிமிடம் (எண்ணெய் மேலே மிதக்கும் வரை) கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்
சுவையான முருங்கை வெண்டை குழம்பு தயார். இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முருங்கை வெண்டை வித்தியாசமான‌ காம்போ...
கடைசி படம் செமயா இருக்கு.. கலர்புல்

"எல்லாம் நன்மைக்கே"

மீண்டும் கிச்சன் குயின் பகுதிக்கு தேர்வு செய்த அறுசுவை டீம் மிக்க நன்றி

Be simple be sample

தான்க்யூ பாக்யா . டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும்

Be simple be sample