family planning suggestions vaenum

Hi sisters,
Last month enaku 2nd baby delivery aachi, but innum family planning operation pannikala,laproscopic surgery pannalamnu idea iruku,athu pathi suggestions vaenum sisters, pain irukuma, enaku normal delivery, usually operarionku backbonela injection poduvanga solranga athu laproscopic surgeryla poduvangala,intha operationku private hospitals la yavlo cost aagum. Please rply pannunga sisters

//2nd baby delivery aachi,// இரண்டாவதுதானே!

//but innum family planning operation pannikala,// இப்போதைக்கு இது போதும் என்று முடிவு செய்ய வேண்டாம்.

//laproscopic surgery pannalamnu idea iruku,// என்னைக் கேட்டால்... இப்போதைக்கு சர்ஜரி வேண்டாம் என்பேன். இரண்டு குழந்தைகளும் நன்கு வளரும் வரை, வேறு ஏதாவது கருத்தடை முறைகளைப் பயன்படுத்துவது நல்லது. டாக்டர் அடுத்த குழந்தை தங்கினால் உங்களுக்கு அல்லது அந்தக் குழந்தைக்குப் பிரச்சினை என்பதாகச் சொல்லியிருந்தால் மட்டும் சர்ஜரிக்குப் போகலாம். அல்லாவிட்டால் தற்காலிக கருத்தடை முறைகள்தான் இப்போதைக்கு உங்களுக்கு நல்லது.

//pain irukuma,// சின்னதாக முள் தைத்தால் கூட வலிக்கிறது இல்லையா? பெய்ன் இல்லாமல் இருக்காது. ஆனால் பிரசவத்துடன் ஒப்பிடும்போது மீதி எல்லாம் சிம்பிள். பயப்படத் தேவை இல்லை. //usually operarionku backbonela injection poduvanga solranga// அனஸ்தீசியாதான் அது. //athu laproscopic surgeryla poduvangala,// வேண்டாம் என்று நீங்கள் சொல்லி வேறு விதத்தில் மயக்கம் வரவைக்கக் கேட்கலாம் என்று நினைக்கிறேன். இங்கு கேட்கலாம்.

//intha operationku private hospitals la yavlo cost aagum.// இதை வேறு யாராவது அனுபவம் உள்ளவர்கள் சொல்வார்கள். cost பணமாக எவ்வளவு ஆகும் என்பதை அவர்கள் சொல்வார்கள். நான் சொன்ன விலை வேறு. ஒரு வேளை பிறகு ஏதாவது ஒரு காரணத்தால், ஒரு குழந்தை வேண்டும், அவசியம் என்று நினைத்தாலும் கிடைக்காது. யோசித்து முடிவெடுங்கள்.

‍- இமா க்றிஸ்

imma madam sonna mathiri karuthadai muraigal use pannalam.copper t use pannunga

மேலும் சில பதிவுகள்