ரவை குஸ்கா

தேதி: February 19, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. முத்துலெட்சுமி அவர்கள் வழங்கியுள்ள ரவை குஸ்கா என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய முத்துலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

மெல்லிய ரவை - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - 3
பொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்று
பட்டை - சிறிதளவு
கிராம்பு - 2
ஏலக்காய் - ஒன்று
தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்
தண்ணீர் - ஒரு கப்
கொத்தமல்லித் தழை - சிறிது
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

வாணலியில் நெய் விட்டு ரவையை வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
பின்னர் தாளித்தவற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
வதக்கியவற்றுடன் தேங்காய்ப் பால், தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
இந்த தேங்காய்ப் பால் கலவை கொதித்த பின்னர் ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறி மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து திறந்து கிளறி வெந்த பின் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
ரவை குஸ்கா தயார். ரவை உப்புமா போல் இருந்தாலும் இதில் தேங்காய் பால் சேர்ப்பதால் உப்புமாவிலிருந்து சுவை வேறுபடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Butterfly kalakkudhe mugappai ;) super. Vaazthukkalum paratukkalum bala.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க‌ நன்றி வனி அக்கா.

எல்லாம் சில‌ காலம்.....