பாசிப்பயறு குழம்பு

தேதி: February 19, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ரஸியா அவர்களின் பாசிப்பயறு குழம்பு என்ற குறிப்பு சில மாற்றங்கள் செய்து விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ரஸியா அவர்களுக்கு நன்றிகள்.

 

பாசிப்பயறு - ஒரு கப்
முருங்கைக்காய் - 4
பச்சை மிளகாய் - 2
தக்காளி - ஒன்று
பூண்டு ‍- 5
பெருங்காயம் - சிறிது
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்றரை
பசு நெய் - 25 கிராம்
தேங்காய் துருவல் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து


 

பாசிப்பயறை லேசாக வறுத்துக் கொள்ளவும். பின்பு கழுவி குக்கரில் போட்டு அதில் ஒரு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி போட்டு பூண்டு, பெருங்காயம் சேர்த்து 4 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
முருங்கைக்காயை நறுக்கி பாதி வெங்காயத்தை பொடியாக நறுக்கி வெந்த பருப்பில் சேர்க்கவும்.
அதில் மஞ்சள் தூள், சீரகத் தூள், சோம்பு தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
காய் நன்கு வெந்ததும் தேங்காயை அரைத்து குழம்பில் சேர்க்கவும்.
வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு தாளித்து வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். பின்பு அதில் மிளகாய்த் தூள் சேர்த்து கிளறி குழம்பில் கொட்டி கிளறி இறக்கவும்.
சுவையான பாசிப்பயறு குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்