முட்டை சம்சோரி

தேதி: February 19, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கவிசிவா அவர்களின் முட்டை சம்சோரி குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கவிசிவா அவர்களுக்கு நன்றிகள்.

 

முட்டை - 2
தேங்காய்த் துருவல் - அரை கப்
மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் எண்ணெய் - அரை தேக்கரண்டி
(தேங்காய் எண்ணெய் பிடிக்காதவர்கள் சமையல் எண்ணெய் உபயோகிக்கலாம்)
கடுகு - கால் தேக்கரண்டி


 

மிக்ஸியில் தேங்காய் துருவல், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகம், பூண்டு சேர்த்து மையாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க‌ விடவும்
தண்ணீர் நன்கு கொதித்ததும் முட்டையை உடைத்து மஞ்சள் கரு உடையாமல் ஒவ்வொன்றாக ஊற்றவும்.
முட்டை வேகும் வரை கிளற கூடாது. முட்டை வெந்ததும் அரைத்த தேங்காய் கலவையை ஊற்றி லேசாக‌ கிளறி விடவும்.
முட்டை சம்சோரி தயார். சப்பாத்திக்கும் ஏற்ற சைடு டிஷ் இது. சாதத்தில் சேர்த்தும் சாப்பிடலாம். அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம். கொதித்தால் தேங்காயும் தண்ணீரும் தனித்தனியாக பிரிந்து விடும்.

இது ஒரு பத்திய குழம்பு. காரம் சேர்க்காமல் சாப்பிட வேண்டும் என்பவர்களுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

முட்டை இல்லாமல் தேங்காய் மட்டும் ஊற்றியும் செய்யலாம். பத்தியம் இல்லாதவர்கள் காரம் சேர்த்து கொள்ளலாம். அதிக காரம் ஏற்காது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முட்டை சம்சோரி ஈஸி அன்ட் டேஸ்டி ரெசிபி.. எனக்கு காரமே புடிக்காது எனக்கேத்த‌ ரெசிபி தாங்க் கவி அக்கா அன்ட் பாலா அக்கா :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நன்றி அட்மின் டீம். தவறுகளை திருத்தி குறிப்புகளை அழகாக‌ வெளியிட்டமைக்கு மனமார்ந்த‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....

செய்து பாருங்க‌ கவி. சீரகம் வாசனை அன்ட் டேஸ்டுடன் ரொம்ப‌ நல்லா இருந்துச்சி.

எல்லாம் சில‌ காலம்.....

வாழ்த்துக்கள் பாலா.கலக்கல் ரெசிபி.

Be simple be sample

நன்றி ரேவ்'ஸ்

எல்லாம் சில‌ காலம்.....