கறிவேப்பிலை தொக்கு

தேதி: February 19, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. T. S. ஜெயந்தி அவர்களின் கறிவேப்பிலை தொக்கு என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜெயந்தி அவர்களுக்கு நன்றிகள்.

 

கறிவேப்பிலை (இளசானது) - 2 கப்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10
ஓமம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - அரை கப்
புளி - எழுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு


 

கறிவேப்பிலையை ஆய்ந்து சுத்தம் செய்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விடாமல் வெந்தயத்தை வறுத்து எடுக்கவும்.
இதேப் போல் மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், ஓமம், ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலையைப் போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.
பிறகு வாணலியில் மீதிமுள்ள‌ நல்லெண்ணெயில் பாதியை ஊற்றி காய்ந்ததும் அதில் பெருங்காயப் பொடி மற்றும் அரைத்த விழுதைப்போட்டு வதக்கவும்.
கலவை பாதி வெந்ததும் மீதி எண்ணெயை ஊற்றி சுருளக் கிளறி எடுத்து வைக்கவும்.
சுவையான கறிவேப்பிலை தொக்கு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கறிவேப்பிலை தொக்கு ரெசிபி அருமை.. மிகவும் ஆரோக்கியமான‌ உணவு..

"எல்லாம் நன்மைக்கே"

ரொம்ப‌ நல்லா இருந்துச்சி. ஒரு வாரம் வரை கெட்டு போகலை. நல்லா இருந்துச்சி. நன்றி பாக்கியா. நீங்களே பெரிய‌ கிட்சன் குயின் ஆச்சே.

எல்லாம் சில‌ காலம்.....