கொள்ளு சாதம்

தேதி: February 19, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ரஸியா அவர்களின் கொள்ளு சாதம் குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ரஸியா அவர்களுக்கு நன்றிகள்.

 

கொள்ளு - ஒரு கப்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
இலை ‍- ஒன்று
நறுக்கிய‌ பூண்டு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் (அ) வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி


 

கொள்ளை ஒரு மணி நேரம் ஊற‌ வைக்கவும். பின்னர் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் நறுக்கிய‌ பூண்டை போட்டு வதக்கவும்.
அதனுடன் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க‌ விடவும்.
தண்ணீர் கொதித்ததும் அரிசி மற்றும் கொள்ளை கழுவி கொதிக்கும் தண்ணீரில் போடவும்.
அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதி வந்ததும் கிளறி குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
சுவையான ஆரோக்கியம் நிறைந்த கொள்ளு சாதம் தயார். விருப்பப்பட்டால் கடைசியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி கிளறி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Healthy receipe ithu.unga receipes ellam nalla iruku.congrats kitchen queen....

நன்றி அட்மின் டீம். தவறுகளை திருத்தி குறிப்புகளை அழகாக‌ வெளியிட்டமைக்கு மனமார்ந்த‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி வந்தனா.

எல்லாம் சில‌ காலம்.....