கற்கண்டு வடை

தேதி: February 20, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சீதாலெட்சுமி அவர்கள் வழக்கியுள்ள கற்கண்டு வடை குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய சீதாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

முழு வெள்ளை உளுந்து - 2 கப்
கற்கண்டு - 1 1/4 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க


 

உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் எடுத்து களைந்து க்ரைண்டரில் அல்லது மிக்ஸியில் போட்டு அதனுடன் உப்பு, கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
மாவை நன்கு கெட்டியாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை, சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு இரு புறமும் சிவக்க விட்டு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான கற்கண்டு வடை தயார்.

செட்டிநாட்டு விருந்துகளில் இந்த வடை கட்டாயம் இடம் பெறும். இனிப்புப் பலகாரங்களில், ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பதால் இனிப்புச் சுவை கூடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டீம் மற்றும் சீதாம்மா அவர்களுக்கு நன்றி ... சூடாக சாப்பிட நல்ல சுவை... சிறிது ஏலக்காய் சேர்த்தேன்