பாகற்காய் சிப்ஸ்

தேதி: February 20, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்களின் பாகற்காய் சிப்ஸ் என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.

 

பெரிய பாகற்காய் - 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சோள மாவு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு


 

பாகற்காயை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மிளகாய்த் தூள், சோளமாவு, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை போட்டு கலந்து அதனுடன் நறுக்கிய பாகற்காயை சேர்த்து பிசறி வைக்கவும்.
பிசறிய பாகற்காயை ஒரு தட்டில் பரவலாக வைத்து ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய பாகற்காயை சிறிது சிறிதாக எண்ணெயில் உதிர்த்து விட்டு சிவந்ததும் எடுக்கவும்.
சுவையான பாகற்காய் சிப்ஸ் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Ur receipes are sweet and good.congrats.....

Thank u for ur wishes

நல்லா மொறுமொறுன்னு வந்தது...கசப்பு அதிகமா தெரியல... திருமதி சரஸ்வதி அவர்களுக்கு நன்றி