பொட்டுக்கடலை மாவுருண்டை

தேதி: February 20, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. நித்யா கோபால் அவர்களின் பொட்டுக்கடலை மாவுருண்டை என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய நித்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

பொட்டுக்கடலை - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - அரை கப்
ஏலக்காய் - அரை தேக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
மிக்ஸியில் பொட்டுக்கடலையை போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
அதேப் போல் சர்க்கரையையும் பொடி செய்து பொட்டுக்கடலை பொடியுடன் சேர்க்கவும்.
இந்த மாவு கலவையுடன் ஏலக்காய் தூள் சேர்த்து நெய்யை உருக்கி மிதமான சூட்டில் இருக்கும் போது மாவுடன் சிறிது சிறிதாக சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.
சுவையான பொட்டுக்கடலை மாவுரண்டை தயார். இது மிகவும் சத்தான ஒரு இனிப்பு.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குழந்தைகளுக்கு பள்ளிக்கு குடுத்துவிட ஏற்றது... நெய் மணத்துடன் வாயில் போட்டாலே கரையும். நித்யா கோபால் அவர்களுக்கு நன்றி

ஏதாவது சட்டென்று செய்து சாப்பிட ஒரு இனிப்பு தேடி வந்தேன். சுலபமான குறிப்பு. நன்றி பிரியா & நித்தியா.

‍- இமா க்றிஸ்