கோக்கனட் க்ரானிடா

தேதி: February 20, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட வனிதா அவர்கள் வழக்கியுள்ள கோக்கனட் க்ரானிடா குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய வனிதா அவர்களுக்கு நன்றிகள்.

 

தேங்காய் பால் - 2 கப்
சர்க்கரை - தேவைக்கு


 

சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கி கரைந்ததும் எடுக்கவும்.
இதை சர்க்கரை பாகை ஆற வைத்து தேங்காய் பாலுடன் கலந்து கொள்ளவும்.
ஒரு தட்டில் அல்லது கிண்ணத்தில் தேங்காய்ப் பால் கலவையை ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்து நன்றாக கிளறி விடவும்.
இதேப் போலவே அந்த கலவை பொடியாக ஐஸ் போல் ஃப்ரீஸ் ஆகும் வரை வைத்து எடுக்கவும். சுவையான கோக்கனட் மில்க் க்ரானிடா தயார்.

இதே போல் தர்பூசணி, எலுமிச்சை, ஆரஞ்சு, மஸ்க் மெலான், ஸ்ட்ராபெரி என எல்லா பழ சாறிலும் மற்றும் புதினா, காபியிலும் செய்யலாம். இவற்றில் சுவைக்கு ஏற்ற ஐஸ்க்ரீமை மேலே வைத்து பரிமாறலாம். அல்லது ஃப்ரெஷ் க்ரீம் ஊற்றி பரிமாறலாம்.

பழங்கள் பயன்படுத்தும் போது சர்க்கரையை அவற்றோடு சேர்த்தே அடிக்கலாம். நீர் விட தேவை இல்லை. வெயில் நேரங்களில் குழந்தைகள் இதை விரும்புவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை வெளியிட்ட அட்மின் டீம் மற்றும் வழங்கிய வனிதா அவர்களுக்கு மிக்க நன்றிகள்

ரொம்ப நல்லா இருந்தது... வெயிலுக்கு குழந்தைகளுக்கேற்றது