முள்ளங்கி தேங்காய் குழம்பு

தேதி: February 23, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மஹாலெஷ்மி அவர்களின் முள்ளங்கி தேங்காய் குழம்பு என்கின்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மஹாலெஷ்மி அவர்களுக்கு நன்றிகள்.

 

அரை வட்டமாக‌ நறுக்கிய‌ முள்ளங்கி - ஒரு கோப்பை
வெங்காயம் - ஒன்று (சிறியது)
தக்காளி - ஒன்று
புளி - ஒரு கோலிகுண்டு அளவு
அரைக்க:
தேங்காய்த் துருவல் - முக்கால் கப்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - முக்கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - 2 பற்கள்
மிளகு - 3 எண்ணம்
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம் மற்றும் தக்காளியைச் சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கப் அளவு சூடான தண்ணீரில் புளியை ஊற வைக்கவும்.
மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்களை போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கிவிட்டு முள்ளங்கியைச் சேர்த்து வதக்கவும்.
முள்ளங்கி வதங்கியதும் 3 மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதிக்க‌ ஆரம்பித்ததும் ஊற வைத்திருக்கும் புளியைக் கரைத்து ஊற்றவும்.
முள்ளங்கி வெந்து கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டுக் கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான முள்ளங்கி தேங்காய்க் குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லகுறிப்பு தேங்க்ஸ்

manjula and mahalakshmi sisters mullangi thengain kuzhambu nanraga irunhathu seithu parthen. vithyasamaga irukirathu.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.