டைல்ஸ் பெயிண்டிங் - அலங்காரப் பொருட்கள் - அறுசுவை கைவினை


டைல்ஸ் பெயிண்டிங்

திங்கள், 23/02/2015 - 16:51
Difficulty level : Easy
2.8
5 votes
Your rating: None

 

  • டைல்ஸ்
  • பாட்டில்
  • கிண்ணம் அல்லது ப்ளேட்
  • பெயிண்ட் - கருப்பு, ரோஸ், பச்சை

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பெயிண்ட் செய்வதற்கு முன் டைல்ஸை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

முதலில் டைல்ஸில் கருப்பு நிற பெயிண்ட் வைத்து கிளைகள் வரைந்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில் ரோஸ் நிற பெயிண்ட்டை எடுத்துக் கொண்டு பாட்டிலின் பின்புறத்தை பெயிண்டில் ஒற்றி எடுத்து டைல்ஸில் கிளைகள் வரைந்த இடத்திற்கு மேல் பகுதியில் பூப் போல வைக்கவும்.

அதைப் போலவே கீழ் பகுதியிலும் ஒரு பூப்போல அச்சு வைக்கவும்.

நடுவில் சிறிய பூவிற்கு 3 இதழ்கள் இருப்பது போல் அச்சு வைக்கவும்.

கிளைகளின் நடுவில் இலைகள் வரையவும்.

அழகிய டைல்ஸ் பெயிண்டிங் ரெடி. டைல்லின் பின்புறம் டபுள் சைடட் டேப் ஒட்டி சுவற்றில் ஒட்டி வைக்கலாம்.


டைல்

டிசைன் அழகா இருக்கு. ட்ரை பண்ணுறேன்.

hi

Super semaya iruku

டைல் பெய்ன்டிங்

செய்தாச்சு செண்பகா. அழ...கா வந்திருக்கு.

பிங்க் டைல் பெய்ன்ட் இல்லை. கலக்க சோம்பலா இருந்துது. :-) சிவப்புப் பூ & மஞ்சள் மகரந்தம் வைத்தேன். இலைகளை நிரப்பி வர்ணம் தீட்டினேன். என்னிடமிருந்தது டெக்க்ஷர்ட் டைல். கோடுகள் சீராக வரவில்லை. ஆனாலும் அழகாக வந்திருக்கிறது. டைல் பெய்ன்ட் - புதன் கிழமை பேக் செய்யலாம். அதன் பிறகு கொக்கி ஒட்டி எங்காவது மாட்டப் போகிறென்.

படம் ஃபான்ஸ் பக்கம் போட்டிருக்கிறேன். எல்லோருமாக விசிறிவிட்டால் சீக்கிரம் பெய்ன்ட் ஈரம் உலர்ந்துவிடும். :-)