மொச்சை வறுவல்

தேதி: February 25, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்களின் மொச்சை வறுவல் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.

 

மொச்சை - 200 கிராம்
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 8 பல்
இஞ்சி - சிறு துண்டு
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

மொச்சையை உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்து வைக்கவும்.
வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு அதில் பொடியாக நறுக்கின தக்காளி, இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு குழைந்தவுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
தூளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த மொச்சையைப் போட்டு குறைந்த தீயில் வைத்து வதக்கி, நீர் வற்றியதும் இறக்கவும்.
சுவையான ஸ்பைசி மொச்சை வறுவல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Super :) ippadilaam padam potaa naan vecha kannu vaangaama paarkaranae... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப‌ நன்றி வனி...//ippadilaam padam potaa naan vecha kannu vaangaama paarkaranae... ;)// பார்க்கமட்டும் செய்யாம‌ செய்துட்டு டேஸ்ட் எப்படி இருந்ததுன்னும் சொல்லுங்க‌..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....