சிந்தி பாஜி

தேதி: February 26, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சுபா ஜெயப்ரகாஷ் அவர்களின் சிந்தி பாஜி குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சுபா அவர்களுக்கு நன்றிகள்.

 

ஸ்பினாச் - அரை கட்டு
கத்தரிக்காய், காரட், உருளை, கோவைக்காய், முள்ளங்கி - 250 கிராம்
வெங்காயம் - ஒரு கப்
பூண்டு - 2
பாசி பருப்பு + துவரம் பருப்பு + மசூர் பருப்பு + கடலை பருப்பு - அரை கப்
பச்சைமிளகாய் - 3
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - தாளிக்க
சீரகம் - தாளிக்க
பெருங்காயம் - சிறிது
காய்ந்த மிளகாய் - 3


 

காய்களை அலசி விட்டு நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை கீறி வைக்கவும்.
கீரையை சுத்தம் செய்து அலசி வைக்கவும். பருப்பை குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், காய்கள், கீரை சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் காய்கள், வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான சிந்தி பாஜி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்