ஈசி கிட்ஸ் பாஸ்தா சமையல் குறிப்பு - படங்களுடன் - 30903 | அறுசுவை


ஈசி கிட்ஸ் பாஸ்தா

வழங்கியவர் : KavithaUdayakumar
தேதி : வியாழன், 26/02/2015 - 09:51
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4
3 votes
Your rating: None

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் ஈசி கிட்ஸ் பாஸ்தா என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவணயா அவர்களுக்கு நன்றிகள்.

 

  • பாஸ்தா - ஒரு கப்
  • காரட், பட்டாணி, சோளம், ப்ரோக்கலி - கால் கப்
  • பூண்டு - 2
  • மிளகு தூள் - அரை தேக்கரண்டி
  • பால் - 2 மேசைக்கரண்டி
  • ஆலிவ் எண்ணெய் / பட்டர் - ஒன்றரை தேக்கரண்டி
  • ட்ரைட் பார்ஸ்லி, ரோஸ்மேரி, தைம், ஒரிகனோ - கால் தேக்கரண்டி
  • சீஸ் - ஒரு மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு

 

வெங்காயம், பூண்டு, காரட், ப்ரோக்கலி அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் பாஸ்தா சேர்த்து 8 முதல் 10 நிமிடம் வரை வேக வைக்கவும் (பாஸ்தா வகையை பொருத்து வேகும் நேரம் மாறலாம்). வெந்ததும் தண்ணீரை முற்றிலும் வடிக்கட்டி மேலே அரை தேக்கரண்டி எண்ணெய் தெளித்து ஆற விடவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் அல்லது பட்டர் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், காய்கறிகள் சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும்.

வதக்கியவற்றுடன் பால் சேர்த்து ட்ரைட் பார்ஸ்லி, ரோஸ்மேரி, தைம், ஒரிகனோ, மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.

வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து கிளறவும். உடனே அடுப்பை அணைத்து விட்டு மேலே சீஸ் தூவி பரிமாறவும்.

சுலபமாக செய்யக்கூடிய சுவையான கிட்ஸ் பாஸ்தா ரெடி.





இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..