அப்பக்கா

தேதி: February 27, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. புவனேஸ்வரி அவர்களின் அப்பக்கா என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய புவனேஸ்வரி அவர்களுக்கு நன்றிகள்.

 

புழுங்கல் அரிசி - 2 கப்
புளித்த தயிர் - 2 கப்
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் - ஒரு மூடி
மிளகாய் வற்றல் - 6
உப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 250 கிராம்


 

புழுங்கல் அரிசியை களைந்து எடுத்து புளித்த தயிரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும்.
புழுங்கல் அரிசியை ஊறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அதனுடன் ஊறிய கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து எடுக்கவும்.
அதே மிக்ஸியில் சிவப்பு மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி ஆகியவற்றை நைசாக அரைத்து எடுக்கவும்.
அரிசி, பருப்பு கலவையுடன் தேங்காய், மிளகாய் விழுதை சேர்த்து கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி போட்டு கலக்கவும். மாவு உருட்டி போடும் பக்குவத்தில் இருக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை எடுத்து தட்டிப் போடவும். சிவந்ததும் எண்ணெயை வடித்து எடுத்து வைக்கவும்.
சுவையான அப்பக்கா தயார். டீயுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கல்பு........ :) நலமா? எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கிறது உங்களை இப்படி முகப்பில் பார்க்க!! வார்த்தையே இல்லை என் மகிழ்ச்சியை சொல்ல. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கல்பு. படங்கள்.... அப்படியே தக்காளி குறிப்பையும், ரசகுல்லாவையும் நினைவு படுத்திடுச்சு. ரொம்ப ரொம்ப அழகா இருக்கு கல்பு. :( உங்க குறிப்புகளை ரொம்ப மிஸ் பண்ணேன் இவ்வளவு காலமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Vazthukkal Kalps.romba naal kazichu Kalps kurippu super.

Be simple be sample

எக்கா எக்கா எக்கா எக்கா அப்பக்கா.. கொஞ்சம் தட்டில் கொட்டி குடுக்கா கல்புக்கா.. புதுசு புதுசு ட்ரை பண்ணியிருக்கீங்க அம்மிணி.. லேட்டா வந்தாலும் லேடஸ்டா வருவது இதுதானோ..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்