கோழி சூப்

தேதி: February 2, 2007

பரிமாறும் அளவு: 4 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கோழி எலும்புடன் - 100 கிராம்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒன்று
தக்காளி பொடியாக நறுக்கியது - ஒன்று
இஞ்சி பொடியாக நறுக்கியது - 1/2 தேக்கரண்டி.
பூண்டு பொடியாக நறுக்கியது - 1/2 தேக்கரண்டி.
கொத்தமல்லி, புதினா பொடியாக நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு.
மிளகு - ஒரு தேக்கரண்டி.
துவரம் பருப்பு - 3 தேக்கரண்டி.
வெண்ணெய் - 2 தேக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி.


 

ப்ரஷர் குக்கரில் வெண்ணெய் போட்டு, பட்டை, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி, பூண்டு, மிளகு, துவரம் பருப்பு, கொத்தமல்லி, புதினா இவற்றையும் அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.
இப்போது கோழிக்கறியை கலந்து, உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு வெய்ட் போட்டு சிம்மில் ஐந்து நிமிடம் ப்ரஷர் குக் செய்து இறக்கி விட வேண்டும்.
சூப் ஆறியவுடன், வடிகட்டி, வெந்த எலும்பில்லாக் கோழித்துண்டுகளை மட்டும் கலந்து, மிளகுத்தூள் தூவி பரிமாற வேண்டும்.


எளிதில் தயாரிக்கக் கூடியது
சூப் திக்கால இருக்க கார்ன் மாவு ஒரு தேக்கரண்டி நீரில் கலந்து, சூப்பில் சேர்த்து, ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து பரிமாறலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜுபைதா... வழக்கமா ஜலீலா குறிப்பில் உள்ள சிக்கன் சூப் தான் செய்வோம். இன்று உங்க குறிப்பு. வித்தியாசமான சுவை. எல்லாருக்கும் பிடிச்சுது. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா