கோழி சுக்கா

தேதி: February 2, 2007

பரிமாறும் அளவு: 2 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழிக்கறி - 1/4 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி.
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி.
தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி.
வினிகர் - ஒரு தேக்கரண்டி.
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி.
வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு.
எண்ணெய் - பொரிக்க.
சர்க்கரை - 1/4 தேக்கரண்டி.
பொடியாக நறுக்கிய பூண்டு - 1/2 தேக்கரண்டி.


 

கோழிக்கறி, மிளகாய் தூள், வினிகர் 3/4 தேக்கரண்டி, 3/4 தேக்கரண்டி சோயா சாஸ், தனியாத் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு இவைகளைக் கலந்து குறைந்தது 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர், எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
வேறொரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில், 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டு போட்டு பொன்னிறமாக வதக்கி, அதனுடன், காய்ந்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, ஒரு சிட்டிகை உப்புடன் சேர்த்து வதக்க வேண்டும்.
அதனுடன் மீதமுள்ள சோயா சாஸ், சர்க்கரை, வினிகர் இவைகளைக் கலந்து, 2 நிமிடம் வதங்கியவுடன், வறுத்தக் கோழியைக் கலந்து சூடாகப் பரிமாறலாம்.


கிரேவி தேவையெனில், கார்ன் மாவு சிறிதளவும், தக்காளி சாஸ் சிறிதளவும் சேர்த்து, நீர்விட்டு, 2 நிமிடம் சமைத்து, கொத்தமல்லி சேர்த்து பரிமாறலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கோழி சுக்கா சூப்பர்.இப்ப தான் முதலில் உங்களிடம் பேசுறேன்.மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.