hyper thyroid tablet podu. ....

Hi friends last month 3.2.2015 date vandhuduche. But intha month nan thyroid (thyrox 25 mg ) poduren.28 days varaikkum Tablet potturuken. But intha 2 days ah podala. Adhanala Ethavathu problem varuma. Illa continue pannalama. Sollunga. Period date varaikkum podama irukkalam. Sollunga please.

// But intha month nan thyroid (thyrox 25 mg ) poduren.// ம். டாக்டர் கொடுத்தாங்க, போடுறீங்க அப்படித்தானே?

//28 days varaikkum Tablet potturuken. But intha 2 days ah podala.// இது அப்படியெல்லாம் போட்டு போட்டு விடுற டாப்லட் இல்லை. //Adhanala Ethavathu problem varuma.// புதுசா ப்ராப்ளம் வராது. என்ன ப்ராப்ளம் இருக்கு, சரியாகணும் என்று கொடுத்தாங்களோ அது அப்படியே சரியாகாமல் இருக்கும். அப்போ... அது ப்ராப்ளம்தானே! இல்லையா!

//Illa continue pannalama.// போடலாமா!! என்னங்க கேள்வி இது! டாக்டர் தொடர்ந்து போடச் சொன்னாங்க இல்ல! போடுங்க, போடணும் கட்டாயம். நாங்க யாரு வேணாம்னு சொல்ல!

//Period date varaikkum podama irukkalam.// இது கேள்வியா இல்ல ஸ்டேட்மண்ட்டா! :-) இது ஒண்ணும் இருபத்தொரு நாள் போட்டுட்டு மீதி நாள் அயர்ன் டாப்லட் போடுற மாதிரி விஷயம் இல்லை. என்ன ஆனாலும், என்ன ஆகாவிட்டாலும் டாக்டர் வேண்டாம்னு சொன்னால் தவிர விடாமல் தொடர்ந்து போடணும் நீங்க.

//Sollunga please.// இங்க கேட்டது எல்லாம் உங்க டாக்டரிடம் கேளுங்க. என்ன சொல்றாங்கன்னு பாருங்க. :-)

நீங்கள் குழந்தைக்காகக் காத்திருப்பவர் என்று நினைக்கிறேன். வாழ்க்கையோட விளையாடாதீங்க. நஷ்டம் உங்களுக்குத்தான். உங்க டாக்டர்ல நம்பிக்கை இல்லாட்டா இன்னொரு ஸ்பெஷலிஸ்ட்டை கன்சல்ட் பண்ணுங்க. தப்பில்லை. அதை விட்டுட்டு உங்க இஷ்டத்துக்குல்லாம் பண்ணப் படாது. மருந்தை வாங்கி வந்தால் மட்டும் உடம்பு குணமாகாது. நேரம் தவறாமல் சொன்ன முறைப்படி போடுறது அவசியம்.

‍- இமா க்றிஸ்

Hi mam adhuku illa period date time so adhanala podalama illa vendamnu keten. Yen intha time potta period vandhudumo nu bayama irukku.

தோழி thyroidகு மாத்திரை கட்டாயம் உட்கொள்ள வேண்டும் ....

Hi Frds en husbandku hyper tyroid iruku avaruku athanala padapadapu varuthu doctorta katinom.tablet thanthuru haga apadi irukapa potokuraga nalla iruku..em husband solraga eathum problem illanu.But Eanaku payama iruku..ethanala avarku eathum problem illala??plz Solluga Frds..Na eathum doubt kta yarum replay panna matringa kastama iruku..plz ethuku answer pannuga pa plzzz...Eanaku payama iruku..I Love my husband lot..sóplz answer me

//period date time so adhanala podalama illa vendamnu// பீரியட்ஸ் டைம் மற்ற நாட்களைப் போலதான். எந்த வித்தியாசமும் இல்லைங்க. போடுங்க.

//intha time potta period vandhudumo nu bayama irukku.// இது தைராய்ட் ஹோமோன் டாப்லட், மாதவிடாய் தொடர்பான ஹோமோன் டாப்லட் இல்லை. போடணும். போடுங்க. //intha time potta period vandhudumo nu bayama irukku.// அப்படி வந்தாலும் கூட அது இந்த டாப்லட்டால வந்ததாக இராது. இது குழந்தைக்கு நல்லது செய்யுமே தவிர எதிர்மாறான விளைவுகளைக் கொடுக்காது.

என்ன சந்தேகம் இருந்தாலும் மருந்து கொடுத்த டாக்டரைக் கேட்டிருக்கலாம்ல! பணமும் நேரமும் செலவளிச்சு டாக்டர்ட்ட போய் மருந்து எடுக்கறீங்க. இப்படி சந்தேகத்தை வைச்சுட்டு மருந்து போடவோ போடாமல் இருக்கவோ கூடாது. இனிமேல் அங்கயே கேட்டுரணும்.

‍- இமா க்றிஸ்

//ethanala avarku eathum problem illala?// இல்லை. அதான் உங்க கணவரே பெட்டரா இருக்குன்னு சொல்றாங்க இல்ல! பிறகு என்ன சந்தேகம்?

//Na eathum doubt kta yarum replay panna matringa// தமிழ்ல கேட்டுப் பாருங்க. :-) நாலு தடவை படிச்சுட்டேன் இதுவரை. பாதி புரியல. ;)

//kastama iruku.// :-) உங்க கேள்வி படிக்க எனக்கு கஷ்டமா இருக்குங்க. ஒண்ணு தமிழ் எழுத்துல தமிழ்ல தட்டுங்க, இல்ல ஆங்கில எழுத்துல ஆங்கிலத்துல தட்டுங்க. தமிங்கிலத்துல தட்டுறதானா அட்லீஸ்ட் ஷார்ட்ஹாண்ட் இல்லாம முழுசாவாவது தட்டுங்க.

//Eanaku payama iruku.// என்ன ஆகும்னு நினைக்கிறீங்க? அதைச் சொல்லுங்க. பிறகு அதுக்கு ஏற்ற மாதிரி பதில் சொல்றேன்.

//I Love my husband lot.// அப்போ பேசாம விடுங்க. அவங்க குழந்தைஇல்லை. நிச்சயம் யோசிச்சு சரியானதைப் பண்ணுவாங்க.

‍- இமா க்றிஸ்

Sorry i'm trying to type tamil but ic'nt type..Sorry .. Hyper tyroid eathum big problem má??athanala uir ku eathum problem má??

Hi mam enga mami health inspector ah irukanga. So avanga doctor kitta alachuttu poga matranga. Enaku blood test eduthu vantha report vachchu avangaluku therintha doctor kitta vangittu vandhutanga. Nan yar kitta kekkurathu sollunga mam. Nan college la work pandren mam suththama rest illa mam. So yaru kitta kekkurathu theriala Adhan mam keten .thanks

என்ன சொல்றதுன்னு தெரியல விஜி. நீங்க வேலைக்குப் போறீங்க. //avanga doctor kitta alachuttu poga matranga.// நீங்க போய் காட்ட முடியாதா? உங்க கணவர்ட்ட பேசுங்களேன்.

தைராயிட் பிரச்சினை இருந்தா, டாப்லட் எடுக்கணும். அளவு... ஆள் ஆளுக்கு வேறுபடும். குழந்தை தங்கியிருந்தா இந்த டாப்லட் எடுக்கிறதால பீரியட்ஸ் வந்துரும் என்கிற பயம் வேண்டாம். அப்படி ஆகாது.

‍- இமா க்றிஸ்

//Hyper tyroid eathum big problem má?// இது ஆம், இல்லை என்று பதில் சொல்ல முடியாத கேள்வி. நிச்சயம் சின்ன விஷயம் என்று ஒதுக்க முடியாது. நிறையச் சின்ன சின்ன விடயங்கள் சரியாக இருக்க தைராயிட் சரியான அளவில் இருப்பது முக்கியம். பல்பிட்டேஷன் இருந்ததாகச் சொன்னீர்கள். எப்போதாவது அவங்க நைநைன்னு இருக்கிறதா நீங்க ஃபீல் பண்ணக் கூடும். காரணம் இல்லாமல் உங்க மேல எரிஞ்சு விழுந்துட்டே இருந்தாங்கன்னா... அது உங்களைப் பொறுத்த வரை பெரிய பிராப்ளம்தானே! இல்லையா! அப்படி ஆகலாம்.

//athanala uir ku eathum problem má??// உயிருக்குப் பிரச்சினை என்றால் மட்டும்தான் மாத்திரை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் சந்தேகம் என்ன? கேள்வி சரியாகப் புரியவில்லை. கான்சரே உயிருக்குப் பிரச்சினையான விஷயம் இல்லை என்று ஆகிவிட்ட காலம் இது. தைராயிட் சமநிலைக் குறைபாட்டால் இறப்பு நேர்வது இல்லை. அதற்காக மருந்து எடுக்காமல் விட்டால் பிரச்சினை இதனால்தான் என்பது புரியாமலே நிறையப் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வரலாம். மாத்திரை எடுப்பதுதான் சரி.

அறுசுவைல தைராயிட் என்று சர்ச் பண்ணிப் பாருங்க. நிறைய த்ரெட் கண் முன்னே வரும். டாப்லட் போடுற யாரும் உயிர் போகாம இருக்கணும் என்கிறதுக்காக போடல. வாழ்க்கை... வாழ்றோம். ஒரு சில முக்கியமான விடயங்கள் மிஸ் ஆகிட்டா பணம், படிப்பு, புகழ் என்று ஆயிரம் இருந்தாலும், வாழ்க்கை பூரணப்படுவது இல்லை.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்