கேரட் புதினா புலாவ் சமையல் குறிப்பு - படங்களுடன் - 30960 | அறுசுவை


கேரட் புதினா புலாவ்

வழங்கியவர் : Revathi.s
தேதி : செவ்வாய், 03/03/2015 - 10:11
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
5
1 vote
Your rating: None

திருமதி. இளவரசி அவர்களின் மின்ட் கேரட் புலாவ் என்ற குறிப்பு கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய இளவரசி அவர்களுக்கு நன்றிகள்.

 

 • புதினா - ஒரு கட்டு
 • பாஸ்மதி அரிசி - ஒரு கப்
 • கேரட் - 3
 • பெரிய வெங்காயம் - 2
 • பட்டை - சிறு துண்டு
 • லவங்கம் - ஒன்று
 • சோம்பு - ஒரு தேக்கரண்டி
 • சீரகம் - ஒரு தேக்கரண்டி
 • இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
 • சின்ன வெங்காயம் - 5
 • பச்சை மிளகாய் - ஒன்று (காரத்திற்கேற்ப)
 • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

 

புதினா இலைகளைச் சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம், பட்டை, லவங்கம் சேர்த்து அரைத்து வைக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயம் மெல்லியதாக நறுக்கி வைக்கவும். அரிசியை ஊறவைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.

பிறகு கேரட்டை போட்டு வதக்கவும்.

கேரட் வதங்கியதும் அரைத்த புதினாவைப் போட்டு வதக்கவும்.

அதனுடன் ஊற வைத்த பாசுமதி அரிசியைப் போட்டு வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி கலந்துவிடவும். பிறகு உப்பு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

பிறகு குறைந்த தீயில் 10 நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் மூடியின் மேல் சுடுநீர் நிரம்பிய மூடிவைத்த பாத்திரத்தை வைத்து 5 நிமிடங்கள் தம்மில் போடவும்.

சுவையான கேரட் புதினா புலாவ் ரெடி.

விருப்பப்பட்டால் ஒரு கைப்பிடி அளவு பச்சை பட்டாணியை வெங்காயம் வதக்கிய பிறகு சேர்த்து வதக்கலாம். ப்ரஷர் குக்கரில் வைக்க விரும்பினால் ஒன்றரை கப் நீர் விட்டு, சிறு தீயில் ஒரு விசில் விட்டு பிறகு 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும்.கிகு 5 முதல் ராணி

அடபாவமே அவ்வளவு சீக்கிரம் முடிச்சாச்சா ரேவா உன் ஸ்பீடு செம்ம ஸ்பீடு கிகு 5 டிஸ் முடிச்சி முகப்பிலும் வந்தாச்சா.. கலக்கு அம்மிணி.. குறிப்புகள் அனைத்தும் சூப்பர்.. படங்கள் பளீச் பளீச் புது மொபைல் கைவசமா.. ம்ம் என்ஜாய்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

rev

thanku rev.;)

Be simple be sample

ரேவா

அதுக்குள்ள செய்துட்டீங்களா சூப்பர் ரேவா கிச்சன் குயினுக்கு வாழ்த்துக்கள் :) புலாவ் அருமை

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.