மஸ்ரூம் டெவல்

தேதி: March 4, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. நர்மதா அவர்களின் மஸ்ரூம் டெவல் என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய நர்மதா அவர்களுக்கு நன்றிகள்.

 

காளான் - 300 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய உள்ளி - அரை கப்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி
நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் - 3 மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது


 

காளானை கழுவி 4 அல்லது 6 துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
காளானை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு மேற்கூறிய எண்ணெய், கெட்ச் அப், கொத்தமல்லித் தழை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும், அதனுடன் கலந்து வைத்திருக்கும் காளான் கலவையை கொட்டி கிளறவும். பின் பாத்திரத்தை மூடி காளானை நன்கு வேக விடவும்.
காளான் வெந்ததும் மூடியை திறந்து நீர் வற்றும் வரை கிளறி நீர் வற்றியதும் தணலை குறைத்து வைத்து அதனுடன் தக்காளி கெட்சப்பை ஊற்றி கிளறவும்.
மஸ்ரூம் டெவல் தயார். இதனை பரிமாறும் பாத்திரத்தில் போட்டு கொத்தமல்லித் தழை தூவி ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா, நாண் போன்ற எந்த வகை உணவுடனும் பரிமாறலாம். எண்ணெய் அதிகம் விரும்பாதவர்கள் எண்ணெயை குறைத்தும் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் கிச்சன் குயின் :) சூப்பர் டிஷ் தர்ஷா, நாங்கள் மஷ்ரூம் சாப்பிடுவதில்லை, காய்கறியில் இதேப் போன்று செய்துப் பார்க்கிறேன்.

வாழ்த்துக்கு நன்றி. செய்து பாருங்கள்.