நாண்

தேதி: February 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (7 votes)

நிறைய நேயர்கள் விரும்பிக் கேட்ட குறிப்பு இது. நாண் போன்ற தந்தூரி உணவுகள், தென்னிந்திய வீடுகளில் அதிகம் தயாரிக்கப்படுவதில்லை. எனவே உணவு விடுதியில் தயாராகும் முறையை படங்கள் எடுத்துக் கொடுத்துள்ளோம். இதற்கு தந்தூரி அடுப்பு முக்கியம். அதில் செய்யும் போதுதான் நாண் நன்றாக இருக்கும். தந்தூரி அடுப்பு இல்லாதவர்கள், தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுக்கலாம். நிச்சயம் சுவையில் வித்தியாசம் இருக்கும். ஒரு பெரிய மண்பானை இருந்தால் அதில் கரி போட்டு தற்காலிக தந்தூரி அடுப்பாக மாற்றிக் கொள்ளலாம். ஓவனிலும் வைத்து சுட்டெடுக்கலாம்.

 

மைதா - ஒரு கிலோ
முட்டை - 3
பால் - அரை லிட்டர்
சீனி - 100 கிராம்
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி


 

மாவைக் குவித்து வைத்து, மத்தியில் சிறிய குளம் போல் செய்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் பால், சீனி மற்றும் உப்பு சேர்க்கவும்.
இவையனைத்தையும் தண்ணீர் ஊற்றி பிசையவும். அதிகம் தண்ணீர் ஊற்றிவிடாமல், சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
மாவினை நன்கு பிசைந்து, பெரிய உருண்டையாக உருட்டி வைத்து அதன் மேல்புறத்தில் எண்ணெய் தடவவும். இதனை மாலிஷ் செய்தல் என்று சொல்லுவர். இப்படி செய்வதால் மாவு நன்கு இளகிய பதமாக மாறும்.
பின்னர் அந்த மாவினை ஈரத்துணிக் கொண்டு மூடிவிடவும். சுமார் ஒரு மணி நேரம் இப்படி ஊறவிடவும்.
20 நிமிடங்களுக்கு ஒரு முறை துணியை எடுத்துவிட்டு, கையை குவித்து வைத்து, புறங்கை பகுதியால் மாவினை நன்கு அழுத்தி பிசையவும். இப்படி பிசைவதினால் மாவு நல்ல பதத்திற்கு மாறும். நாண் மிகவும் சாஃப்டாக கிடைக்கும்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு மாவினை நாண்களாக தேய்க்கலாம். ஆரஞ்சு பழ அளவு உருண்டைகளாக மாவை உருட்டி, அதனை கையாலேயே தட்டி நாண் செய்யலாம். அல்லது சப்பாத்தி கட்டையால் தேய்த்தும் செய்யலாம்.
கையினால் ஓரளவிற்கு வட்டமாக தட்டிக் கொண்ட பிறகு, அதனை எடுத்து இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றி போட்டு, மாவினை சற்று இழுத்துவிட்டவாறு நாணை பெரிதாக்குவர். இது உணவுவிடுதிகளில் மாஸ்டர்கள் செய்யும் முறை. பழக்கம் இல்லாதவர்கள் சாதாரணமாக சப்பாத்தி கட்டையால் தேவையான அளவிற்கு மாவினை விரித்துக் கொள்ளலாம்.
மாவை விரித்து அதன் ஒரு புறத்தை இழுத்து நீள் வட்டமாக மாற்றிக் கொள்ளவும். பின்னர் ஒரு துணியை பந்தாக சுருட்டி கையில் வைத்துக் கொண்டு, அதில் நாணை வைத்து தந்தூரி அடுப்பில் ஒட்டவும். துணியினால் நாணை சற்று அழுத்திவிடவும்.
பொதுவாக நாண் வட்டமாக இல்லாமல் கோழி முட்டை வடிவில் செய்யப்படும். இது தந்தூரி அடுப்பில் வைத்து தயாரிக்கப்படுவதால், அதில் ஒட்டி, வேக வைத்து எடுக்க வசதியாக இந்த வடிவத்தில் செய்வர். குறுகிய பாகம் அடுப்பின் உட்பக்கத்தை நோக்கி இருக்கும். இதனால் கீழிருந்து வரும் வெப்பம் நாணின் அகன்ற பாகத்திற்கும் எளிதாகச் செல்லும்.
நாண் வெந்தவுடன் அதனை இரண்டு கம்பிகள் கொண்டு எடுக்கவும். அதிகம் கருகவிடாமல், பதமாய் வெந்தவுடன் எடுத்துவிடவேண்டும்.
வெளியே எடுத்த பிறகு நாணின் மீது சிறிது வெண்ணெய் தடவவும். ஸ்டப்டு நாண் செய்வதற்கு, மாவினை நாணாக தேய்க்கும் முன்பே அதில் நாம் சேர்க்க விரும்பும் மசாலா, இதரப் பொருட்களை வைத்து பின்னர் தேய்த்து, சுட்டெடுக்க வேண்டும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

please tell நான்க்கு ஈஸ்ட் தேவை இல்லையா?????????

நாண் செய்வதற்க்கு கண்டிப்பாக ஈஸ்ட் தேவை . நாம் வீட்டில் செய்வதாக இருந்தால் ஆனால் இந்த ரெசிபியில் ஈஸ்ட் சேர்த்து செய்யவில்லை .

இதற்க்கு அட்மின் அவர்கள் தான் பதில் கொடுக்க வேண்டும்.

நீங்கள் குறிப்பிட்டு உள்ளது சரியே. பெரும்பாலும் சிறிதளவு ஈஸ்ட் சேர்த்துதான் நாண் மாவு தயாரிக்கின்றனர். அது மாவினை விரைவில் நொதிக்க வைக்கும். நாண் மிகவும் மிருதுவாக இருக்கும். ஆனால் மேலே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையில் ஈஸ்ட் சேர்க்கப்படவில்லை. உணவு விடுதி ஒன்றில் தயாரிக்கப்பட்ட நாணின் செய்முறை படங்கள் அவை. அவர்களிடம் கேட்டு உறுதி செய்துகொண்டேன். ஈஸ்ட் சேர்க்காமலும் செய்யலாம் என்றனர். இதே மாவை அவர்கள் ரொமாலி ரொட்டி போன்றவற்றிற்கும் பயன்படுத்துவர்.

ஈஸ்ட் சேர்க்க விரும்பினால், சிறிதளவு ஈஸ்ட்டினை மிதமான சுடுதண்ணீரில் கரைத்து மாவில் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

அட்மின் அவர்களுக்கு
சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்க்கு மிக்க நன்றி

சந்தேகத்தை தெளிவு படுத்தி வைத்ததற்க்கு மிக்க நன்றி!!!!!!!
மிக்க நன்றி,செய்து கதிஜா !!!!!!!

சந்தேகத்தை தெளிவு படுத்தி வைத்ததற்க்கு மிக்க நன்றி!!!!!!!
மிக்க நன்றி,செய்து கதிஜா !!!!!!!

இன்று காலை உங்களின் நாண் செய்தேன் சுவையாக இருந்தது,சீஸ் நாண் தான் செய்தேன், பிசைந்தமாவின் உருண்டைக்குள் வாஸ்கிரி [லைட்சீஸ்] வைத்து செய்தேன், மிகவும் நன்றாக இருந்தது,என் குழைந்தைகள்,அன் ,என் கணவர் விறும்பி சாப்பிட்டார்கள் சிக்கன் மசாலா இதர்க்கு நன்ராக இருந்தது,நன்றி,நன்றி,நன்றி,,,,,

நாண் செய்வதற்கு தந்துரி அடுப்பு இல்லாமல் சாதரண அடுப்பில் பண்ணலாமா? தயவுசெய்து யாரவது சொலுங்கலேன்

நாண் செய்ய தந்தூரி அடுப்பு இல்லை சாதா அடுப்பில் செய்யலாமா தயவு செய்து கூறவும் நீங்கள் கூறியதும் தான் செய்ய வேண்டும்