வெஜிடபிள் சூப்

தேதி: February 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

நெய்-1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்
கிராம்பு-2
ஏலம்-2
பட்டை- 1 சிறிய துண்டு
அரைத்த இஞ்சி- அரை ஸ்பூன்
சிறிய பூண்டு- 5 பற்கள்
நறுக்கிய பொதினா- 1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி- 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய சிறிய வெங்காயம்-கால் கப்
நறுக்கிய தக்காளி- 1 கப்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
வேக வைத்த பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்
புளி- நெல்லி அளவு
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்
தேவையான உப்பு
கீழே உள்ளவற்றைப் கரகரப்பாகப் பொடிக்கவும்:
சோம்பு- 1 டீஸ்பூன், மிளகு- 1 டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன்


 

• புளியை சிறிது நீரில் ஊற வைத்து ஒரு கப் அளவு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் எண்ணெயையும் நெய்யையும் ஊற்றவும்.
• பட்டை, கிராம்பு, ஏலம் இவற்றைப் போட்டு வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
• சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
• இப்போது தக்காளியையும் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
• பொதினா, கொத்தமல்லி சேர்த்து ஒரு தடவை நன்கு கலந்து புளி நீருடன் மேலும் 5 கப் நீர் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
• சில வினாடிகள் கொதித்ததும் தூளைச் சேர்க்கவும்.
• நன்கு கொதித்து வரும்போது பருப்பைச் சேர்த்து இறக்கவும்.
• சிறிது ஆறியதும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

madam.
வெஜிடபிள் சூப் thayarika entha kaaihalum use pannalayea?
kerat
beens
serthum seiyalama?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ரொம்ப நாள் சந்தேகம். ரசத்திற்கு சூப்பிற்கும் என்ன வித்தியாசம்? தயவுசெய்து விளக்க முடியுமா?

ரசத்திலும் சூப்பிலும் பொதுவாக பெரும்பாலான காய்கறிகளை உபயோகிக்க முடியும் என்றாலும் இவை இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சூப் தயாரிப்பதிலேயே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நமது தென்னிந்திய சூப் தயாரிப்புகளில் தாளிப்பிற்கு, கரம் மசாலா வகைகள் பயன்படுத்தப்படுகிறது. அவைகளில் சேர்க்கப்படும் பொடிகளிலும் கரம் மசாலா சேர்க்கப்படுகின்றன. அதை ரசம் மாதிரி சாதத்திலும் ஊற்றிக் கலந்து சாப்பிடலாம். மற்ற சூப் வகைகள் வேறு மாதிரியானவை. சில வகைகளில் சோள மாவு, சில வகைகளில் மைதா மாவு என சூப்பை கெட்டிப்படுத்துவதற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படுகின்றது. வெண்ணெய், மிளகுத்தூள் , அஜினமாடோ, சொயா சாஸ், போன்ற பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை கப்புகளில் ஊற்றி ஒரு ஸ்பூனின் உதவி கொண்டு மட்டுமே அருந்த முடியும். இந்த சூப் வகைகள் அனைத்து உணவகங்களிலும் உணவு உண்ணுவதற்கு முன் பரிமாறப்படுகிறது. வெளி நாடுகளில் உள்ள எல்லா இந்திய உணவகங்களிலும் ஐந்து நட்சத்திர உணவகங்களிலும் 'starter' என்ற பகுதியில் இது போன்ற சூப் வகைகள் பரிமாறப்படுகின்றன.
ரச வகைகளில் வெந்தயம், மிளகு, சீரகம், கடுகு, வற்றல் மிளகாய், பெருங்காயம் போன்ற பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. பெரும்பாலும் புளி நீரிலும் சில சமயங்களிலும் எலுமிச்சை ரசத்திலும் செய்யப்படும் இந்த ரச வகைகளில் பெரும்பாலும் கடுகு மட்டும்தான் தாளிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்த நீண்ட விளக்கம் உங்களுக்குத் திருப்தியாக இருக்குமென நினைக்கிறேன்.

'வெஜிடபிள் சூப்' செய்வதில் நிறைய வேறு வேறு மாதிரியான செய்முறைகள் உள்ளன. காரட், பீன்ஸ், பீட்ரூட் போன்ற காய்கறிகளைச் சேர்த்தும் செய்யலாம். வேக வைத்த காய்கறிகளைப் பிறகு மசித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வடிகட்டி சூப் தயாரிக்க வேண்டும். பொதுவாக எந்தக் காய்களிலும் சூப் செய்ய முடியும் என்றாலும் காரட், தக்காளி, பீட்ரூட், முதலியவை அதிகம் சுவை கொடுக்கும். கத்தரி, வாழை போன்ற சில காய்களில் சூப் செய்ய இயலாது.