மீன் அவியல்

தேதி: March 5, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லதா கணேஷ் அவர்கள் வழங்கியுள்ள மீன் அவியல் என்கின்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லதா அவர்களுக்கு நன்றிகள்.

 

மீன் - அரைக் கிலோ
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 3
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் - கால் மூடி
சின்ன வெங்காயம் - 2
சீரகம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


 

மீனை நன்கு கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம், காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் ஆகிய‌வற்றை மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
அரைத்த விழுதை ஒரு வாணலியில் போடவும்.
அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சூடாக்கவும்.
அதன் பிறகு அந்த விழுதுடன் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும்.
அதில் தேவையான‌ அளவு தண்ணீர் ஊற்றி கறிவேப்பிலை தூவி கொதிக்க‌ விடவும்.
மீன் வெந்ததும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். அவியல் கொதித்து கெட்டியானதும் இறக்கி விடவும். சுவையான மீன் அவியல் ரெடி. சூடாக பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மீன் அவியல் சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள் கிச்சன் குயின் .

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

செம‌ ஸ்பீடு டீம். மனமார்ந்த‌ நன்றிகள் அட்மின் டீம்.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி ஷீலா. டேஸ்டும் நல்லா இருக்கும். செய்து பாருங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

மீன் அவியல் நான் புளி சேர்த்து தான் செய்துள்ளேன்.
தக்காளியில் உள்ல புளிப்பே போதுமா இதுக்கு. நல்ல கலர்ஃபுல் டிஷ்

புளியும் சேர்க்கலாம். புளி சேர்க்காமலும் செய்யலாம். புளி சேர்க்காவிட்டால் தக்காளி அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். தக்காளியை தேங்காய் கலவையுடன் அரைத்தும் செய்யலாம்.

எல்லாம் சில‌ காலம்.....