பச்சை பட்டாணி தோசை சமையல் குறிப்பு - படங்களுடன் - 30992 | அறுசுவை


பச்சை பட்டாணி தோசை

வழங்கியவர் : balanayagi
தேதி : வியாழன், 05/03/2015 - 09:56
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
0
No votes yet
Your rating: None

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. வத்சலா அவர்களின் பச்சை பட்டாணி தோசை குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வத்சலா அவர்களுக்கு நன்றிகள்.

 

  • பயத்தம் பருப்பு (பாசி பருப்பு) - ஒரு கப்
  • பச்சை பட்டாணி - ஒரு கப்
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சி துருவியது - ஒரு தேக்கரண்டி
  • வெங்காயம் - ஒரு கப் (நறுக்கியது)
  • கறிவேப்பிலை கொத்தமல்லி - அரை கப் (நறுக்கியது)
  • உப்பு - தேவையான அளவு
  • பெருங்காயத்தூள் ‍- ஒரு சிட்டிகை

 

பயத்தம் பருப்பை சுத்தம் செய்து 30 நிமிடம் வெந்நீரில் ஊற வைக்கவும்.

பருப்பு ஊறியதும் எடுத்து தண்ணீர் வடித்து, அதனுடன் பச்சை பட்டாணி, மிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து தோசைமாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

மாவுடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை கலந்து 10 நிமிடம் வைத்திருக்கவும்.

பின்பு தோசை கல்லில் எண்ணெய் தடவி தோசையாக வார்த்து மொறு மொறுப்பாக சுட்டு எடுக்கவும்.

பச்சை பட்டாணி தோசை தயார். சூடாக பச்சை சட்னியுடன் பரிமாறவும்.

பச்சை சட்னிக்கு தேங்காய், பொட்டுக்கடலை, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும்.bala

Congrats bala. Ella kurippum super.photos sama clear.

Be simple be sample

நன்றி அட்மின்

மனமார்ந்த‌ நன்றிகள் அட்மின்.

எல்லாம் சில‌ காலம்.....

ரேவ்'ஸ்

நன்றி ரேவ்'ஸ். உங்க‌ அளவுக்கு இல்ல‌. இன்னிக்கு 4 குறிப்பு உங்களோடது போல‌. நீங்க‌ தான் கலக்கறீங்க‌. எல்லாமே சூப்பர்.

எல்லாம் சில‌ காலம்.....

பாலா

வாழ்த்துக்கள் குயின் :) குறிப்பு படங்கள் ஜோரா இருக்குங்க. வித்தியாசமான குறிப்புகளும் கூட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா

நன்றி அக்கா

எல்லாம் சில‌ காலம்.....