தேங்காய்ப்பால் பூண்டு கஞ்சி

தேதி: March 6, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மாலதி அவர்களின் தேங்காய் பால் பூண்டு கஞ்சி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மாலதி அவர்களுக்கு நன்றிகள்.

 

பச்சரிசி - ஒரு கப்
வறுத்த பாசி பருப்பு - அரை கப்
தேங்காய் - ஒரு மூடி அல்லது ரெடிமேட் தேங்காய்ப் பால் - ஒரு டின்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உரித்த பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 8 கப்


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
அரிசி மற்றும் பருப்புடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசி, பாசிபருப்பு மற்றும் வெந்தயத்தை கழுவி போடவும்.
அரிசி பாதியளவு வெந்ததும் உரித்த பூண்டை சேர்த்து வேக விடவும். அரிசி குழைய வெந்ததும் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கியதும் தேங்காய்ப் பாலை சேர்க்கவும்.
சுவையான தேங்காய்ப் பால் பூண்டு கஞ்சி ரெடி.

தேங்காய் பயன்படுத்துபவர்கள் தேங்காயை துருவி பிழிந்து பால் எடுத்து கஞ்சியில் சேர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்