மலேசியா பச்சடி

தேதி: March 6, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

திருமதி. பீவி அவர்கள் வழங்கியுள்ள மலேசியா பச்சடி என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய பீவி அவர்களுக்கு நன்றிகள்.

 

பழுத்த அன்னாசி பழம் - ஒன்று அல்லது பழ டின் - ஒன்று
பழுத்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பரல்
சின்ன வெங்காயம் - 10 அல்லது பெரியது - பாதி
மஞ்சள் பொடி - சிறிது
சீனி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
அன்னாசி பழத்தை பொடியாக நறுக்கி தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், பழுத்த மிளகாய், பூண்டை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் ஓரளவு வதங்கியதும் மிளகாய் ( பச்சை மற்றும் சிவப்பு ) மற்றும் பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு 4 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி, சீனி போட்டு கொதிக்க விடவும்
கொதிக்கும் கலவையுடன் வேக வைத்த அன்னாசிப் பழத்தை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
வித்தியாசமாகவும் அதே சமயத்தில் ருசியாகவும் இருக்கும் இந்த பச்சடி மலாய்காரர்களின் கல்யாணம், மற்ற விஷேசங்களிலும் பிரியாணியுடன் பரிமாறப்படும்.

டின்னில் அடைக்கப்பட்ட அன்னாசி பழத்தையும் பயன்படுத்தி செய்யலாம். ஆனால் அதில் உள்ள சிரப்பை பயன்படுத்த வேண்டாம்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பச்சடி கலர்ஃபுல்லா இருக்கு :) வாழ்த்துக்கள் சுமி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா