கேரட் புதினா சட்னி

தேதி: March 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (5 votes)

 

துருவிய கேரட் - ஒரு கப்
தக்காளி - 2
புதினா - ஒரு கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய் - 4
இஞ்சி - சிறு துண்டு
உளுந்து - 2 தேக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிது


 

புதினாவைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். தக்காளியை நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் உளுந்து மற்றும் காய்ந்த மிளகாயை வறுக்கவும்.
அதே வாணலியில் கேரட், புதினா, தக்காளி மற்றும் இஞ்சியை வதக்கி ஆறவிடவும்.
வறுத்தவற்றுடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
வதக்கிய பொருட்கள் ஆறியதும் அத்துடன் சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
மசிந்ததும் பொடித்த காய்ந்த மிளகாய் பொடியைச் சேர்த்து அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து அரைத்தவற்றுடன் சேர்த்து, கொத்தமல்லித் தழையைத் தூவவும்.
குழந்தைகளுக்கு ஏற்ற ஹெல்தியான கேரட் புதினா சட்னி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலக்கல் சட்னி சத்தானதும் கூட என்ன அம்மிணி கலக்குறீங்க ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Enathu kurippai veliyidda admin& arusuvai team thanku

Be simple be sample

Thanks SWA ;)

Be simple be sample

super