பாலக் பூரி

தேதி: March 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கோதுமை மாவு - 2 கப்
பாலக் கீரை - பாதி கட்டு
எண்ணெய் - பொரிக்க
ரவை - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

பாலக் கீரையை சுத்தம் செய்து கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். கோதுமை மாவில் ரவை மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
அரைத்த கீரையை மாவுடன் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். தேவையெனில் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து சிறு வட்ட பூரிகளாக தேய்த்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
சுவையான பாலக் பூரி ரெடி.

கீரையை நீரில் வேக வைப்பதை விட எண்ணெயில் வதக்கினால் பச்சை வாடை இல்லாமல் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அட பூரியே செய்ய வராம இருந்தவங்க இப்ப என்னடான்னா பாலக் பூரிலாம் செய்து கலக்குறாங்க ஹ்ம்ம் அருமை சத்தான பூரி சூப்பர் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கலக்கலா இருக்கு. எல்லா பூரியும் உப்பி இருக்கு. எப்டி இது? சூப்பரா இருக்கு ரேவ்'ஸ்.

எல்லாம் சில‌ காலம்.....

கலக்கல் அன்ட் உப்பல் பூரி... சூப்பரு.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பாலக் பூரி சூப்பரா வந்திருக்கு.... ஹெல்தி டிஷ் :)

"எல்லாம் நன்மைக்கே"

பூரி சூப்பராக இருக்கு. கடைசி படம் அழகு

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

Thanks adminanna& team

Be simple be sample

Swa thanks. Guruvey neegathana

Sumi thanks
Bsla thanks
Thanks packia
Thanks Sheena.

Be simple be sample

பூரி ஃபோட்டோ எதையுமே நம்ப முடியல :o

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Believe me :) vani. Thanku

Be simple be sample