பூரி சப்ஜி

தேதி: February 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைகிழங்கு - 250 கிராம்
கேரட் - 250 கிராம்
பட்டாணி - 1/2 கிலோ
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

முதலில் கேரட்,உருளைகிழங்கை சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கி,பட்டாணி,கேரட்,உருளைகிழங்கு ஆகியவற்றை போட்டுவதக்கி,1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி ,சாம்பார்பொடி,மஞ்சள்தூள்,உப்பு போட்டு கொதித்ததும் மூடி விசில் வந்ததும் 5 நிமிடம் கழித்து இறக்கவும்.


இது பூரி உடன் சாப்பிட ஏற்றது

மேலும் சில குறிப்புகள்