முளைக்கட்டிய பயிறு கட்லெட்

தேதி: March 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஆண்டாள் கிஷோர்குமார் அவர்களின் முளை கட்டியபயிறு கட்லெட் என்கின்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஆண்டாள் அவர்களுக்கு நன்றிகள்.

 

முளைக்கட்டிய பாசி பயிறு - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
குடைமிளகாய் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
முட்டைக்கோஸ் - 100 கிராம்
பீட்ருட் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 8
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பல்லு
சோள மாவு - 2 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 50 மில்லி
கொத்தமல்லித் தழை - சிறிது
புதினா - சிறிது


 

பயிறை 6 மணி நேரம் ஊற வைத்து சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்து விடவும்.
8 மணி நேரம் கழித்து திறந்தால் முளைவிட்டு இருக்கும். இதை ஆவியில் வேக வைக்கவும். பயறை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
எல்லா காய்கறிகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டினை நசுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு தாளித்து வெங்காயம், நறுக்கிய காய்கறிகள், இஞ்சி, பூண்டு, மசித்த உருளை ஆகியவற்றை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
காய்கறிகளுடன் அரைத்த பயிறை போட்டு வதக்கி அதனுடன் சோளமாவு, அஜினோமோட்டா, கரம் மசாலா தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
பின்னர் அதில் கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து பிசைந்து கட்லெட் அச்சில் போட்டு தேவையான வடிவத்தில் செய்து கடாயில் எண்ணெய் ஊற்றி கட்லெட்டை போட்டு எல்லாப் பக்கங்களும் வேகும்படி பொரித்து எடுக்கலாம். அல்லது தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு திருப்பி போட்டு சுட்டு எடுக்கலாம்.
சுவையான முளைக்கட்டிய பாசிபயறு கட்லெட் தயார். இதற்கு தக்காளி சாஸ் அல்லது பாசிபயிரில் செய்த தயிர் பச்சடி தொட்டு கொள்ளலாம்.

பயிறு தயிர் பச்சடி : புளிக்காத கெட்டியான ஒரு கப் தயிரில் பச்சைமிளகாய், அரைத்த இஞ்சி சேர்த்து ஒரு மூடி தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து பின் ஒரு கப் பச்சையான முளைக்கட்டிய பயிறு சேர்த்து கலந்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பயறு கட்லட் ரொம்ப அருமயா செய்து இருக்கீங்க சத்தான கட்லட்