சைனீஸ் ஜிஞ்சர் சில்லி சிக்கன்

தேதி: March 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மஹாலெட்சுமி ப்ரகதீஸ்வரன் அவர்களின் சைனீஸ் ஜிஞ்சர் சில்லி சிக்கன் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மஹாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

கோழி - அரை கிலோ
வெங்காயம் - ஒன்று
சோயாசாஸ் - அரை கப்
வினிகர் - கால் கப்
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 2 மேசைக்கரண்டி
மைதா மாவு - ஒரு தேசைக்கரண்டி
இஞ்சி - ஒரு இன்ச் நீளத்துண்டு
பச்சைமிளகாய் - 3
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு


 

கோழியை எலும்புடன் சிறு உருண்டைத் துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயத்தை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கோழித் துண்டுகளைப் போட்டு அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம், மிளகுத் தூள், மஞ்சள் தூள், சோயா சாஸ், வினிகர், அஜினோமோட்டோ, நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
கோழித் துண்டுகள் ஊறியதும் எல்லாவற்றையும் குக்கருக்கு மாற்றி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விட்டு அரை வேக்காடு வேக வைத்து குக்கரை இறக்கவும்.
ஒரு கிண்ணத்தில் கார்ன் ஃப்ளார், மைதாமாவு இவற்றை ஒன்றாக போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கட்டிகலில்லாமல் கரைத்து வைக்கவும்.
வாணலியில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் குக்கரில் இருந்து கோழித் துண்டுகளை மட்டும் எடுத்து கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து எண்ணெயில் இரண்டிரண்டாக போட்டு பொரித்து சிவந்ததும் எடுக்கவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு சிவக்க வறுக்கவும்.
அதில் பொரித்தெடுத்த கோழித் துண்டுகளை போட்டு பிரட்டி விட்டு, குக்கரில் உள்ள கிரேவியும் ஊற்றி எண்ணெய் தெளிந்து வரும் போது இறக்கவும்.
சூடாக இருக்கும் போதே பரோட்டா, சப்பாத்தி இவற்றுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமா இருக்கே! அவசியம் டிரை பண்ணிப் பார்க்கனும். :)