ஃப்ரைடு இட்லி

தேதி: February 4, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இட்லி - 6
மைதா - 4 தேக்கரண்டி
கார்ன் ஃபிளார்(மாவு) - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கேசரி கலர் - சிறிதளவு(தேவைப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்க்கு


 

இட்லியை நீளவாக்கில் வெட்டவும்.
மைதா மாவு,கார்ன் ஃபிளார்,கலர் பவுடர்,மிளகாய்தூள்,உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கலக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
துண்டுகளாக்க பட்ட இட்லியை இந்த மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுகன்யா

உங்க பிரைடு இட்லி ஐடியா, சூப்பர் உங்க சிந்தனை.
இட்லி மீதியானா இட்லி உப்புமா மட்டும் தான் எனக்கு தெரியும்,அதுவும் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு சார் சாப்பாட்டை பற்றி பேசும் போது அவர் சொன்னது.

பிறகு யாரும் சமைக்கலாம் பகுதியில் இட்லி பிங்கர்ஸ், அடுத்து நீங்க கொடுத்துள்ள பிரைடு இட்லி(அப்படியே பிராக்கெட்டில் குழந்தைகளுக்கு) என்று கொடுத்து விடுங்கள்.
ஒரு முறை சிக்கன் பஜ்ஜிக்கு கார்ன் பிளார் மைதா கலவை நிறைய கரத்து விட்டென் மீதிஅயானதை என்ன செய்வது தெரியாமல் மனசிலாமல் கீழே ஊற்றினேன், இப்ப ப்ரைடு இட்லிக்கு உபயோகப்படுத்தலாம்.

இன்னும் டிபெரெண்டான குறிப்புகள் கொடுக்க என் வாழ்த்துக்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் சுகன்யா நலமா?
இதற்காகவே நான் இட்லி செஞ்சு ப்ரைடுஇட்லி செய்தேன் நன்றாக இருந்தது
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்