ஓலன்

தேதி: March 10, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கவிசிவா அவர்களின் ஓலன் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய கவிசிவா அவர்களுக்கு நன்றிகள்.

 

வெள்ளை பூசணி - 200 கிராம்
சிவப்பு பயிறு (சிவப்பு காராமணி அல்லது பெரும்பயிறு) - அரை கப்
பச்சை மிளகாய் - 5
தேங்காய் - அரை மூடி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

வெள்ளை பூசணியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிவப்பு பயிறை குக்கரில் வேக வைத்து எடுத்து வைக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்து பிழிந்து முதல் மற்றும் இரண்டாம் பால் எடுக்கவும்.
வாணலியில் பூசணித் துண்டுகள், பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, இரண்டாம் தேங்காய் பால் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து வேக விடவும்.
காய் வெந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பயிறை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கரண்டியால் காய் மற்றும் பயிறை லேசாக மசித்து விடவும்.
பிறகு முதல் தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கூட்டில் சேர்க்கவும். சுவையான ஓலன் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான‌ குறிப்பு.
கலக்கலான‌ படங்கள்... வாழ்த்துகள்!

கேரளா ஓலன் செய்முறையும் படங்களும் சூப்பர்..

"எல்லாம் நன்மைக்கே"