பெங்காலி தக்காளி சட்னி

தேதி: March 11, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (2 votes)

திருமதி. நித்யா கோபால் அவர்கள் வழங்கியுள்ள பெங்காலி தக்காளி சட்னி குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய நித்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

தக்காளி - 3
பஞ்ச் பூரன் விதைகள்(சோம்பு, கடுகு, வெங்காய விதை, வெந்தயம், சீரகம்) - தலா கால் தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி


 

தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கவும். உலர்ந்த திராட்சையை சிறிது நேரம் ஊற வைக்கவும்.
மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி அவனில் வைத்து ஒரு நிமிடம் சூடுப்படுத்தி எடுக்கவும். அந்த எண்ணெயில் பன்ச் பூரன் விதைகளை சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்.
அதனுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கலந்து மூடி மைக்ரோவேவில் 3 நிமிடம் சுட வைக்கவும்.
அதில் திராட்சை, இஞ்சி, பச்சை மிளகாய், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
இந்த கலவையை மைக்ரோவேவில் 10 நிமிடம் வைக்கவும். 4 நிமிடத்திற்கு ஒரு முறை எடுத்து கிளறி விடவும்.
தக்காளி நன்கு வெந்து குழைந்ததும் எடுத்து மிக்ஸியில் அரைக்கவும். சுவையான பெங்காலி தக்காளி சட்னி தயார். அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்