வேர்க்கடலை கொழுக்கட்டை

தேதி: March 11, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பச்சரிசி மாவு - கால் படி
வேர்க்கடலை - 100 கிராம்
தேங்காய் - அரை மூடி
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் - 2


 

வெறும் வாணலியில் வேர்க்கடலையை வறுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வைக்கவும். வெல்லம் மற்றும் ஏலக்காயை பொடி செதுக் கொள்ளவும்.
தேங்காய் துருவலை வறுத்து எடுத்துக் கொண்டு அதனுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய் வேர்க்கடலை பொடி சேர்த்து கலந்து பூரணம் செய்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். மற்றொரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை எடுத்துக் கொண்டு அதில் வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாக பிசையவும்.
பிசைந்த மாவில் ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். உருட்டும் போது எண்ணெய் தொட்டு உருட்டி வாழை இலையில் வைத்து அப்பளம் வடிவில் தட்டிக் கொள்ளவும்.
தட்டிய மாவில் ஒரு தேக்கரண்டி பூரணத்தை நடுவில் வைத்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
இதே போல் அனைத்து மாவிலும் கொழுக்கட்டையாக தயாரித்து கொள்ளவும். பிறகு இட்லி பானையில் கொழுக்கட்டையை வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான வேர்க்கடலை பூரணக் கொழுக்கட்டை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்