ஆலுகோபி மசாலா

தேதி: March 11, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

0
No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ரங்கநாயகி ராஜகோபாலன் அவர்கள் வழங்கியுள்ள ஆலுகோபி மசாலா குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ரங்கநாயகி அவர்களுக்கு நன்றிகள்.

 

சிறிய உருளைக்கிழங்கு - அரைக் கிலோ
காலிஃப்ளவர் - ஒன்று
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - கால் லிட்டர்
கொத்தமல்லித் தழை - சிறிய கட்டு
மிளகாய்த் தூள் - ஒன்றரைத் தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாப் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
முந்திரிப்பருப்பு - 10
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 4


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி, பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து தனியே வைக்கவும்.
காலிஃப்ளவரை பெரியத் துண்டங்களாக நறுக்கி, நன்கு கழுவி பின்னர் சூடான தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு வைத்து வடிகட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காலிஃப்ளவரையும், உருளைக்கிழங்கினையும் தனித்தனியேப் பொரித்து எடுக்கவும்.
ஒரு அகலமான வாணலியில் வெண்ணெயை போட்டு உருகியதும், அரைத்த விழுதினைச் சேர்த்து மிதமான தணலில் வைத்து கொதிக்க விடவும்.
மசாலா கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் போது, தனியாத் தூள், சீரகத் தூள், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள் சேர்க்கவும்.
ஒரு நிமிடம் கழித்து தேவைகேற்ப உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றவும். கலவை நன்றாக கொதித்ததும், பொரித்த உருளைக்கிழங்கு மற்றும் காலிப்ளவரை சேர்க்கவும்.
மேலும் ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லித்தழையினைத் தூவி இறக்கவும். சுவையான ஆலு கோபி மசாலா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்