மீன் குழம்பு

தேதி: February 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் - 1/2 கிலோ
புளி - ஒரு எழுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 30
வத்தல் - 8
சீரகம் - 5 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிது


 

முதலில் மீனை சுத்தம் செய்துக்கொள்ளவும்.

புளியை கரைத்து தனியாக வைக்கவும்.

வத்தல், சீரகத்தை மைபோல் அரைக்கவும்.

வெங்காயத்தை மட்டும் தனியாக கரகரப்பாக அரைக்கவும்.

கரைத்து வைத்த புளிகரைசலில் மசாலாவை போட்டு,அரைத்த வெங்காயம்,மஞ்சள்தூள், உப்பு போட்டு கலந்துவைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் புளிகரைசலை ஊற்றி கொதித்ததும் மீன் துண்டுகளைப்போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.குழம்பில் எண்ணெய் மிதந்து மீன் வெந்ததும் .மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hi Madam,

நான் ஜப்பானில் வசிக்கிறேன். குழம்பு செய்வதற்கு எந்த வகை மீன்கள் நன்றாக இருக்கும், எந்த மாதிரி பேர் உள்ள மீன் வாங்கனும். நான் "Saba" மீன் குழம்பு செய்தேன், ஆனால் பிடிக்கவில்லை. Guide me pls.

Sanju

ஹாய் சஞ்சு,கதீஜா சில காரணத்தினால் சில நாட்கள் அருசுவை பக்க்ம் வரமாட்டாள் சீலா,நெய் மீன்லாம் செமத்தியா இருக்கும் இன்னும் சொல்ல போனா ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு டேஸ்ட் தான் அதை நாம் சமைக்கும் விதத்தை அறிந்து சமைக்கனும்...கதீஜா அனேகமா நான் குறிப்பிடும் சீலா,நெய் மீன் இதில் ஏதாவது இருகும்...ஜப்பானில் இதை எப்ப்டி சொல்லுவாங்கன்னு தெரியல...கூடிய விடைவில் உங்களுக்கு பதில் அளிப்பாள்....நன்றி

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு